இந்தியாவிற்கான ஹூண்டாய் எலன்ட்ராவின் இஞ்ஜின் விவரங்கள் வெளியாகியது

By Ravichandran

ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் இந்தியாவிற்கான ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் இஞ்ஜின் விவரங்கள் வெளியாகியது.

ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் இஞ்ஜின் குறித்த கூடுதல் விவரங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹூண்டாய் எலன்ட்ரா...

ஹூண்டாய் எலன்ட்ரா...

ஹூண்டாய் எலன்ட்ரா, தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் நிறுவனம் தயாரித்து வழங்கும் செடான் ஆகும்.

இது வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் வாகனங்களில் ஒன்றாகும்.

அறிமுகம்;

அறிமுகம்;

ஹூண்டாய் எலன்ட்ரா செடான், 10 மாதங்களுக்கு முன்பு அலுவல் ரீதியாக முறைப்படி நவம்பர் 2015-ல் நடைபெற்ற லாஸ் ஏஞ்சலஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹூண்டாய் நிறுவனம், இந்த ஹூண்டாய் எலன்ட்ரா செடானை இந்திய வாகன சந்தைகளில், செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

ஹூண்டாய் எலன்ட்ரா செடான், மொத்தம் 2 விதமான இஞ்ஜின் தேர்வுகளில் வழங்க உள்ளது.

இதில், தற்போதைய 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் மட்டுமல்லாமல், ஒரு புதிய பெட்ரோல் இஞ்ஜினும் சேர்க்கப்பட உள்ளது.

மேலும், டர்போசார்ஜர் உடைய மற்றொரு இஞ்ஜின், ஹூண்டாய் எலன்ட்ராவின் வாழ்நாளில் பின்னர் சேர்த்து கொள்ளப்படும்.

1.6 லிட்டர் இஞ்ஜின்;

1.6 லிட்டர் இஞ்ஜின்;

ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின், தற்போதைய எலன்ட்ரா மாடலில் பொருத்தப்பட்டுள்ள ரீ-டியூனிங் செய்யபட்ட வடிவமாகும்.

தற்போதைய எலன்ட்ரா மாடலில் பொருத்தப்பட்டுள்ள இந்த 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் 126 பிஹெச்பியை வெளிப்படுத்துகிறது.

இதே 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின், ரீ-டியூனிங் செய்யபட்ட புதிய எலன்ட்ரா செடானில் 134 பிஹெச்பியை வெளிப்படுத்தும்.

1.6 லிட்டர் இஞ்ஜின் - கியர்பாக்ஸ்;

1.6 லிட்டர் இஞ்ஜின் - கியர்பாக்ஸ்;

ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்ட வேரியன்ட், 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வெளியாகிறது.

2.0 லிட்டர் இஞ்ஜின்;

2.0 லிட்டர் இஞ்ஜின்;

ஹூண்டாய் எலன்ட்ரா செடானுக்கு, புதிய 2.0 லிட்டர் ஆட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது.

இது, 147 பிஹெச்பியை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

இந்த இஞ்ஜின், எரிபொருள் சிக்கனம் மிகுந்ததாக இருக்கும்.

2.0 லிட்டர் இஞ்ஜின் - கியர்பாக்ஸ்;

2.0 லிட்டர் இஞ்ஜின் - கியர்பாக்ஸ்;

ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்ட வேரியன்ட் போன்றே 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட வேரியன்ட்டும், 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வெளியாகிறது.

புதிய இஞ்ஜின்;

புதிய இஞ்ஜின்;

முன்பு குறிப்பிட்ட 2 இஞ்ஜின் தேர்வுகளை தாண்டி, ஹூண்டாய் நிறுவனம் ஹூண்டாய் எலன்ட்ரா செடானிற்கு புதிய 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் இஞ்ஜின் பொறுத்த திட்டமிட்டு வருகிறது.

இந்த இஞ்ஜினின் பவர் வெளிப்பாடு குறித்த அதிகப்படியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த இஞ்ஜின் தேர்வானது இந்தியாவில் வெளியாகும் போது, 7-ஸ்பீட் கியர்பாக்ஸ் தேர்வுடன் வெளியாகும்.

ஸ்டைலிங்;

ஸ்டைலிங்;

ஹூண்டாய் எலன்ட்ரா செடானுக்கு பின்பற்றப்பட்டு வந்த ஃப்ளூயிடிக் டிசைன் சித்தாந்ததிற்கு பதிலாக, முதிர்ச்சி நிறைந்த ஸ்டைலிங் முறை ஏற்கபட்டுள்ளது.

பொழுதுபோக்கு;

பொழுதுபோக்கு;

ஹூண்டாய் எலன்ட்ரா செடானில், ஆண்ட்ராய்ட் ஆட்டோ வசதி இயங்கும் வகையிலான புதிய டச்ஸ்கிரீன் டிஸ்பிளே கொண்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹூண்டாய் எலன்ட்ரா ஸ்போர்ட் செடான் அறிமுகம் - இந்தியாவிற்கு வருமா?

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் விற்பனைக்கு வந்தது - விபரம்

எலன்ட்ரா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

Most Read Articles
English summary
Hyundai is all set to bring their new Elantra sedan into India this September, around 10 months after its official debut at LA Auto Show in November 2015. Elantra sedan is expected to be offered with two engine options - current 1.6-litre diesel and brand new petrol engine. Another petrol engine with turbocharger on board soon. To know more, check here...
Story first published: Wednesday, July 27, 2016, 16:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X