ஹூண்டாய் எலைட் ஐ20, 4-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் விரைவில் வருகிறது

By Ravichandran

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், 4-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடைய ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக்கை, இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

4-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட ஹூண்டாய் எலைட் ஐ20 தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹூண்டாய் எலைட் ஐ20...

ஹூண்டாய் எலைட் ஐ20...

ஹூண்டாய் எலைட் ஐ20, தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் ஹேட்ச்பேக் ஆகும்.

இது, இந்தியாவில் மிக அதிக அளவில் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக உள்ளது.

மதிப்பு கூட்டல்;

மதிப்பு கூட்டல்;

ஹூண்டாய் நிறுவனம், தாங்கள் வழங்கும் ஹூண்டாய் எலைட் ஐ20 பிரிமியம் ஹேட்ச்பேக்கிற்கு, கூடுதலாக மதிப்பு கூட்ட முடிவு செய்தனர்.

இதன் ஒரு பகுதியாக, எலைட் ஐ20 மாடலை, ஏடி எனப்படும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை தேர்வு முறையில் வழங்க உள்ளனர்.

அறிமுகம்;

அறிமுகம்;

ஏடி உடைய ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக், இந்தியாவில் இந்த பண்டிகை காலங்களின் போது அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஏடி கொண்ட ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக், 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டதாக இருக்கும்.

இந்த இஞ்ஜின், 82 பிஹெச்பியையும், 114 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

டிரான்ஸ்மிஷன்;

டிரான்ஸ்மிஷன்;

ஏடி உடைய ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக்கின் இஞ்ஜின், 4-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டிருக்கும்.

இதே 4-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தான், இந்தியாவில் விற்கப்படும் ஹூண்டாய் கிரான்ட் ஐ10 மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது.

வதந்தி;

வதந்தி;

சில தினங்களுக்கு முன்னதாக, ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக், 4-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியது.

தற்போது, முன்னதாக வெளியான செய்தி, வதந்தி தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிடைக்கும் வேரியன்ட்;

கிடைக்கும் வேரியன்ட்;

ஏடி எனப்படும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக்கின் டாப்-என்ட் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும் என செய்திகள் வெளியாகிறது.

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதி, மிட்-லெவல் வேரியன்ட் எனப்படும் நடுத்தர வேரியன்ட்டில் வழங்கப்படுமா, இல்லையா என்பது குறித்து, இது வரை எந்த விதமான தகவல்களும் வெளியாகவில்லை.

வருங்கால திட்டம்;

வருங்கால திட்டம்;

வருங்காலத்தில், எலைட் ஐ20 ஹேட்ச்பேக்கில் டீசல் வேரியன்ட்டையும், ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்யும் என செய்திகள் வெளியாகிறது.

போட்டி;

போட்டி;

ஏடி உடைய ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக், பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில், மாருதி பலேனோ ஆட்டோமேட்டிக் மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆட்டோமேட்டிக் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

ஏடி உடைய ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக், சுமார் 6.5 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஓரங்கட்டேய்... வருகிறது 250எச்பி பவர் கொண்ட புதிய ஐ20 என் கார்!

ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக் 7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் விரைவில்...

எலைட் ஐ20 தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Hyundai Motors would launch Elite i20 Automatic Transmission by this Festive Season. Hyundai Motors wanted to add more value to its premium hatchback model in Indian market. For this, Elite i20 is offered with an optional Automatic Transmission (AT). Automatic Transmission most likely to be available only in the top-end variant. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X