இந்தியாவில் 7,000 ஹூண்டாய் இயான் கார்களுக்கு ரீகால் அழைப்பு

Written By:

ஹூண்டாய் இந்தியா நிறுவனம், 7,000 இயான் கார்களுக்கு ரீகால் அழைப்பு விடுத்துள்ளது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், ரீகால் செய்வது வழக்கமாகும். அவ்வாறு தான், ஹூண்டாய் நிறுவனமும் தங்களின் இயான் கார்களை ரீகால் செய்துள்ளது.

ஹூண்டாய் இயான் கார்களின் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கிளட்ச் பிரச்னை;

ஹூண்டாய் இயான், இந்நிறுவனத்தின் நுழைவு நிலை ஹேட்ச்பேக்காக உள்ளது. இந்த காரின் கிளட்ச்சில் ஏற்பட்ட பழுது காரணமாக தான், இந்த ரீகால் அழைப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதன் கிளட்ச் கேபிளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, இதன் பேட்டரி கேபிளும் பழுதாகி கொண்டிருந்தது. இவ்வாறாக, 7,657 கார்கள் ரீகால் செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட கார்கள்;

கிளட்ச் பழுது காரணமாக பாதிக்கப்பட்ட ஹூண்டாய் இயான் கார்கள், ஜனவரி 1, 2015 முதல் ஜனவரி 31, 2015 தேதிகளுக்கு இடையே தயாரிக்கப்பட்டவையாகும்.

இலவச சர்வீஸ்;

பழுதான ஹூண்டாய் இயான் கார்களை, இந்நிறுவனம் இலவசமாகவே சரி செய்து தருகிறது.

மாற்றுக்கு ஏற்பாடு;

பாதிக்கப்பட்ட 7,657 ஹூண்டாய் இயான் கார்களை கொண்ட வாடிக்கையாளர்களை, பல்வேறு கட்டங்களில் ஹூண்டாய் நிறுவனம் நேரடியாக தொடர்பு கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாடிக்கையாளர்களின் கிளட்ச் கேபிள் மற்றும் பேட்டரி கேபிள் ஆராயப்பட உள்ளது. அப்படி இவற்றில் பழுதுகள் இருந்தால், இவை இலவசமாக மாற்றி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கருத்து;

ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில், "ஹூண்டாய் நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு தரமான தயாரிப்புகள் வழங்கும் முனைப்புடன் உள்ளது. மேலும், இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள கொண்டுள்ள கார்களை தங்களின் கார்களை டீலர்ஷிப்களுக்கு கொண்டு செல்லுமாறும், அப்படி கார்களில் பழுது இருப்பின், இவற்றிற்கு தரமான சேவை, இந்தியா முழுவதும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Hyundai India has recalled 7, 657 units of Eon- its entry-level hatchback, due to an issue with its clutch cable, which fouls its battery cable. Recalled cars include the ones manufactured between January 1, 2015 - January 31, 2015. This issue will be fixed at no extra costs for customers. Cars will be inspected and if clutch cable and battery cable are faulty, they will be replaced...
Please Wait while comments are loading...

Latest Photos