ஹூண்டாய் ஹேப்பி மூவ் சேவ் அவர் ஹெரிட்டேஜ் என்ற திட்டம் துவக்கம்

By Ravichandran

'ஹேப்பி மூவ் சேவ் அவர் ஹெரிட்டேஜ்' என்ற பெயரில் ஹூண்டாய் நிறுவனம் ஒரு நல்ல முயற்சியை துவக்கியுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் சார்பாக துவக்கபட்டுள்ள இந்த முயற்சி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஹூண்டாய் நிறுவனத்தின் முயற்சி;

ஹூண்டாய் நிறுவனத்தின் முயற்சி;

ஒவ்வொரு நிறுவனமும் அவ்வபோது, சமூக பொறுப்புணர்வு திட்டங்களில் (CSR) முயற்சிகளில் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில், ஹூண்டாய் நிறுவனமும் இத்தகைய முயற்சியை சில தினங்களுக்கு முன் டெல்லியில் துவக்கியது. ஹூண்டாய் ஹேப்பி மூவ் சேவ் அவர் ஹெரிட்டேஜ் என்ற இந்த முயற்சியில், ஹூண்டாய் நிறுவனம் ஆர்கியோலாஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா அமைப்புடன் கூட்டனி அமைத்துள்ளது.

தன்னார்வ தொண்டர்கள் பங்கேற்பு;

தன்னார்வ தொண்டர்கள் பங்கேற்பு;

இந்த ஹூண்டாய் ஹேப்பி மூவ் சேவ் அவர் ஹெரிட்டேஜ் என்ற இந்த சேவையில், 100 ஹேப்பி மூவ் குளோபல் தன்னார்வ தொண்டர்கள் (யூத் வாலிண்டியர்ஸ்) பங்கேற்கின்றனர்.

சேவ் அவர் ஹெரிட்டேஜ் என்பது, பாரம்பரியத்தை காப்போம் என்று அர்தமாகிறது.

இது 20 இந்திய தன்னார்வ தொண்டர்களும், 80 கொரிய தன்னார்வ தொண்டர்களும் பங்கேற்கின்றனர். இந்த தன்னார்வலர்கள் இந்திய பாரம்பரிய சின்னங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

முக்கிய கொள்கைகள்;

முக்கிய கொள்கைகள்;

சேவ் அவர் ஹெரிட்டேஜ் திட்டம், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 4 முக்கிய கோட்பாடுகளை கொண்டுள்ளது.

பாதுகாப்பான நகர்வு (சேஃப் மூவ்), சந்தோஷமான நகர்வு (ஹேப்பி மூவ்), பசுமையான நகர்வு (கிரீன் மூவ்) மற்றும் சுலபமான (ஈஸி மூவ்) என்ற 4 முக்கிய கோட்பாடுகளே, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தினுடைய, மற்றும் சேவ் அவர் ஹெரிட்டேஜ் திட்டத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது.

தன்னார்வலர்களின் இந்த விழிப்புணர்வு திட்டம், ஜனவரி 21, 2016 வரை நடைபெற உள்ளது.

இத்திட்டத்தில் மேற்கொள்ளபடும் பணிகள்;

இத்திட்டத்தில் மேற்கொள்ளபடும் பணிகள்;

ஃபெரோஸ்ஷா கோட்லா, குதுப் மினார், சஃப்தர்ஜங் டோம்ப் உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்களிலும், சேவ் அவர் ஹெரிட்டேஜ் திட்டத்தின் பணிகள் மேற்கொள்ளபட உள்ளது.

இந்த தன்னார்வலர்கள், தோட்டங்களை பராமரிப்பு, வசதிகளை பராமரிப்பு செய்தல் மற்றும் பார்வையாளர்களுக்கு மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.

இதற்கு முன்னரும், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் இத்தகைய திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

பள்ளிகளிலும் திட்டங்கள் நடைபெறும்;

பள்ளிகளிலும் திட்டங்கள் நடைபெறும்;

தன்னார்வ தொண்டர்கள் பள்ளிகளில் நடைபெறும் திட்டங்களிலும் பங்கேற்று, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த உள்ளனர்.

தன்னார்வலர்கள், பள்ளி வளாகங்களை சுத்தம் செய்யும் பணிகள், பள்ளி சுவர்களை டிசைன் செய்தல், டிசைன் போட்டிகள் மற்றும் தோட்டங்களின் பராமரிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

இந்த திட்டங்கள், சானக்யா புரி, தர்யாகன்ஜ், மெஹ்ரௌலி மற்றும் ஐஎன்ஏ காலனி பகுதிகளில் உள்ள சர்வோதயா ஸ்கூல்கள் போன்ற குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் இந்த திட்டங்கள் மேற்கொள்ளபட உள்ளது.

Most Read Articles
English summary
Hyundai Motors has launched their Happy Move Save Our Heritage Corporate Social Responsibility (CSR) initiative. This CSR initiative was introduced on January 12, 2016, in Delhi and would be held till January 21, 2016, in India. 100 Happy Move Global Youth Volunteers are participating in this Save Our Heritage campaign.
Story first published: Thursday, January 14, 2016, 9:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X