ஐ10 காருக்கு கும்பிடு போடப்போகும் ஹூண்டாய்... சான்ட்ரோவை களமிறக்குகிறது!

Written By:

ஹூண்டாய் ஐ10 காருக்கு விடை கொடுக்க முடிவு செய்துவிட்டது ஹூண்டாய் மோட்டார்ஸ். அதற்கு மாற்றாக புதிய சான்ட்ரோ காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் சிறப்பம்சங்கள், எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது போன்ற விபரங்களை தொடர்ந்து படிக்கலாம்.

ஹூண்டாய் ஐ10 கார் மார்க்கெட்டில் மிக நம்பகமான பிராண்டு. யூஸ்டு கார் மார்க்கெட்டில் கூட சிறந்த மறுவிற்பனை மதிப்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், மார்க்கெட்டில் நீண்ட காலமாக இருந்து வருவதால், வாடிக்கையாளர்களிடம் ஈர்ப்பு குறைந்து வருகிறது.

இதனையடுத்து, ஐ10 காருக்கு விடை கொடுத்து புதிய கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும், புதிய காருக்கு ஐ10 பெயரை பயன்படுத்தாமல், ஏற்கனவே விற்பனை நிறுத்தப்பட்ட சான்ட்ரோ காரின் பெயரை பயன்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு இந்தியர்கள் மத்தியில் மோகம் குறையவில்லை. அந்த பிராண்டின் மீது தனி மரியாதையும், மதிப்பும் வைத்துள்ளனர். அதனை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக விடை கொடுக்கப்பட்ட சான்ட்ரோ பிராண்டில் புதிய மாடலை களமிறக்க இருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ்.

பெயர்தான் பயன்படுத்தப்படுமே தவிர, டிசைன், வசதிகள் உள்ளிட்டவற்றில் பல மாறுதல்களை பெற்றிருக்கும். பழைய சான்ட்ரோ கார்கள் டால்பாய் டிசைன் கான்செப்ட்டில் இருந்தன. ஆனால், புதிய சான்ட்ரோ கார் புளூயிடிக் 2.0 டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

புதிய சான்ட்ரோ கார் தயாரிக்கும் பணிகள் துவங்கிவிட்டாலும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. புதிய சான்ட்ரோ காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலிலும் வரும்.

2018ம் ஆண்டில் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் மார்க்கெட்டுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதி வேகன் ஆர், செலிரியோ உள்ளிட்ட மாடல்களுடன் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் போட்டி போடும்.

English summary
In 2018, Hyundai India is most likely to replace the i10 hatchback with an all-new Santro model. Hyundai Motors India will power all-new Santro with a 1.0-litre petrol engine.
Please Wait while comments are loading...

Latest Photos