ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடைய ஹூண்டாய் எலைட் ஐ20 விரைவில் அறிமுகம்

By Ravichandran

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடைய ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக்கை, இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடைய ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக் பாரிய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹூண்டாய் எலைட் ஐ20...

ஹூண்டாய் எலைட் ஐ20...

ஹூண்டாய் எலைட் ஐ20, தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் ஹேட்ச்பேக் ஆகும்.

ஹூண்டாய் எலைட் ஐ20, இந்திய வாகன சந்தைகளில் அதிக அளவில் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக உள்ளது.

மதிப்பு கூட்டல்;

மதிப்பு கூட்டல்;

ஹூண்டாய் நிறுவனம், தாங்கள் வழங்கும் ஹூண்டாய் எலைட் ஐ20 பிரிமியம் ஹேட்ச்பேக்கிற்கு, கூடுதல் மதிப்பு கூட்ட முடிவு செய்தனர்.

இதற்காக, எலைட் ஐ20 மாடலை, ஏடி எனப்படும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை தேர்வு முறையில் வழங்க திட்டமிட்டுள்ளனர்.

ஏடி வடிவம்;

ஏடி வடிவம்;

ஏடி வசதி கொண்ட ஹூண்டாய் எலைட் ஐ20, அதிக்கப்படியாக 97 பிஹெச்பியை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டிருக்கலாம். ஏடி வசதி கொண்ட ஹூண்டாய் எலைட் ஐ20 மாடலில் உள்ள கியர்பாக்ஸ், 4-ஸ்பீட் டார்க் கன்வெர்டர் யூனிட் கொண்டிருக்கும்.

இந்த வகையிலான இஞ்ஜின்-கியர்பாக்ஸ் கான்ஃபிகரேஷன், ஹூண்டாய் நிறுவனத்தின் இந்திய உற்பத்தி ஆலைகளில் கொஞ்ச காலமாக இருந்து வந்தது. ஆனால், இவை ஏற்றுமதி சந்தைகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.

எம்டி வடிவம்;

எம்டி வடிவம்;

எம்டி எனப்படும் ஸ்டாண்டர்ட்டான மேனுவல் கியர்பாக்ஸ் உடைய ஹூண்டாய் எலைட் ஐ20 மாடலுக்கு, 81 பிஹெச்பியை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

கிடைக்கும் வேரியன்ட்;

கிடைக்கும் வேரியன்ட்;

ஏடி எனப்படும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக்கின் டாப்-என்ட் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும் என செய்திகள் வெளியாகின்றன.

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதி, இதர வேரியன்ட்களில் வழங்கப்படுமா, இல்லையா என்பது குறித்து, இது வரை எந்த விதமான தகவல்களும் வெளியாகவில்லை.

வருங்கால திட்டம்;

வருங்கால திட்டம்;

எலைட் ஐ20 ஹேட்ச்பேக்கில் டீசல் வேரியன்ட்டையும், ஹூண்டாய் நிறுவனம் வருங்காலத்தில் அறிமுகம் செய்யலாம்.

போட்டி;

போட்டி;

ஏடி வசதி கொண்ட ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக், பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில், மாருதி பலேனோ ஆட்டோமேட்டிக் மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆட்டோமேட்டிக் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டியதாக இருக்கலாம்.

புக்கிங்;

புக்கிங்;

ஏடி வசதி கொண்ட ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக்கின் புக்கிங், இந்த செப்டம்பர் மாத மத்தியில் இருந்து துவங்கும்.

அறிமுகம்;

அறிமுகம்;

ஏடி உடைய ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக், இந்தியாவில் இந்த பண்டிகை காலங்களின் போது அறிமுகமாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலை;

விலை;

ஏடி கொண்ட ஹூண்டாய் எலைட் ஐ20 ஹேட்ச்பேக், சுமார் 6.5 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹூண்டாய் எலைட் ஐ20, 4-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் விரைவில் வருகிறது

ஓரங்கட்டேய்... வருகிறது 250எச்பி பவர் கொண்ட புதிய ஐ20 என் கார்!

எலைட் ஐ20 தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Hyundai is planning to launch an automatic version of i20 Hatchback in India soon. This automatic i20 will be offered with petrol engine. Automatic version might be powered by 1.4-litre petrol unit that makes maximum power of 97 bhp. Bookings for these i20 petrol AT will start from sometime around mid-September. To know more about i20 petrol AT, check here...
Story first published: Saturday, August 27, 2016, 13:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X