ஹூண்டாய் கார்களின் விலை ரூ.1 லட்சம் வரை உயர்கிறது!

ஹூண்டாய் கார்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் படிக்கலாம்.

Written By:

புத்தாண்டில் கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு அடுத்தடுத்து விலை உயர்வு செய்திகள் அதிர்ச்சி தந்த வண்ணம் உள்ளன. கார் விலை உயர்வை முதல் ஆளாக டாடா மோட்டார்ஸ் அறிவித்தது.

அதைத்தொடர்ந்து, நிசான் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில், விலை உயர்வு அறிவிப்பை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

கார்களின் விலையை ரூ.1 லட்சம் வரை உயர்த்த இருப்பதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. வரும் ஜனவரி 1 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு கொண்டு வரப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பட்ஜெட் மாடலான இயான் முதல் சான்டாஃ பீ எஸ்யூவி வரை அனைத்து கார்களின் விலையும் உயர்த்தப்பட உள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் விலையும் அதிகரிக்கப்பட உள்ளது.

பண பரிமாற்றத்தில் நிலவும் நிலையற்ற போக்கும், சந்தைப்படுத்துதலுக்கு அதிகரித்துள்ள செலவீனத்தையும் கருதி இந்த விலை உயர்வு நடவடிக்கையை கையில் எடுத்திருப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

 

அதுமட்டுமின்றி, மூலப்பொருட்களின் விலை உயர்வால் உற்பத்தி செலவீனமும் கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே, விலை உயர்வு நடவடிக்கை தவிர்க்க இயலாததாக இருப்பதாக ஹூண்டாய் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராகேஷ் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக ஹூண்டாய் தெரிவித்திருப்பது புத்தாண்டில் ஹூண்டாய் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் மத்தியில் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Hyundai India has announced a price hike up to Rs 1 lakh across its range, effective January 2017.
Please Wait while comments are loading...

Latest Photos