ஹூண்டாய் உருவாக்கும் 402 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்ட எலக்ட்ரிக் கார்

By Staff

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், 402 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்ட எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஹூண்டாய் வழங்க உள்ள புதிய எலக்ட்ரிக் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

எலக்ட்ரிக் கார்..

எலக்ட்ரிக் கார்..

உலகம் முழுவதும், வெவ்வேறு கார் உற்பத்தி நிறுவனங்கள், எலக்ட்ரிக் கார் உருவாக்கும் திட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுப்பற சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதால் இந்த எலக்ட்ரிக் கார்கள், ஹைப்ரிட் கார்களுக்கான ஆதரவு பெருகி கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் தான், டெஸ்லா நிறுவனம், தங்களின் மாடல் 3 காரை அறிமுகம் செய்தனர். இதனை அடுத்து, எலக்ட்ரிக் கார்களுக்கான ஆதரவு கூடி கொண்டே வருகிறது.

ஹூண்டாய் vs. டெஸ்லா;

ஹூண்டாய் vs. டெஸ்லா;

ஒவ்வொரு நிறுவனமும் மாறி மாறி அதிக ரேஞ்ச் கொண்ட எலக்ட்ரிக் கார்களை போட்டி போட்டு கொண்டு அறிமுகம் செய்து வருகின்றன.

டெஸ்லா நிறுவனம், தாங்கள் வழங்கும் மாடல் 3 எலக்ட்ரிக் கார், சுமார் 350 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது.

இதற்கு போட்டியாக, தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் நிறுவனம், சுமார் 402 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்டுள்ள எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

ஹூண்டாயின் வருங்கால திட்டம்;

ஹூண்டாயின் வருங்கால திட்டம்;

ஹூண்டாய் நிறுவனம், 322 கிலோமீட்டர் ரேஞ்ச் உடைய ஒரு எலக்ட்ரிக் காரை (இ.வி) 2018-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளதாக உறுதி செய்துள்ளது.

அயானிக்;

அயானிக்;

ஹூண்டாய் நிறுவனம், 177 கிலோமீட்டர் ரேஞ்ச் உடைய ஹூண்டாய் அயானிக் என்ற எலக்ட்ரிக் காரை, இந்த ஆண்டின் பிற்பாதியில் அமெரிக்காவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த ஹூண்டாய் அயானிக் எலக்ட்ரிக் கார் மொத்தம் 3 மாடல்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹூண்டாய் அயானிக், பிளக்-இன் ஹைப்ரிட், ஸ்டாண்டர்ட் ஹைப்ரிட் மற்றும் எலக்ட்ரிக் கார் (இ.வி) ஆகிய 3 மாடல்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

டெஸ்லாவின் வெற்றி;

டெஸ்லாவின் வெற்றி;

கிரீன் கார் எனப்படும் பசுமையான கார்கள் தொடர்பான விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதில், அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் டெஸ்லா நிறுவனம், பெரிய அளவில் வெற்றி கண்டுள்ளது.

டெஸ்லாவின் மாடல் 3, அமெரிக்காவில் 35,000 டாலர்கள் என்ற விலையில் அறிமுகம் செய்யபட்டது. அந்த நிலையிலும், டெஸ்லாவின் மாடல் 3 காருக்கு, இது வரை சுமார் 130,000 புக்கிங் குவிந்துள்ளது. ஆனால், இதன் டெலிவரி, 2017-ல் தான் துவங்கும் என்பது குறிப்பிடதக்கது.

மாடல் 3-ன் ரேஞ்ச்;

மாடல் 3-ன் ரேஞ்ச்;

டெஸ்லாவின் மாடல் 3, நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் என்ற வேகத்தை 6 நொடிகளில் எட்டிவிடும்.

மேலும், ஒரு முறை சார்ஜ் செய்தால், டெஸ்லாவின் மாடல் 3, சுமார் 346 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டுள்ளது.

ஹூண்டாயின் சவால்கள்;

ஹூண்டாயின் சவால்கள்;

டெஸ்லாவின் மாடல் 3, சுமார் 346 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டுள்ளது என அறிவிக்கபட்ட நிலையில், இதற்கு சவால் விடுக்கும் நிலையில், ஹூண்டாய் நிறுவனம், மேலும் அதிக ரேஞ்ச் கொண்ட எலக்ட்ரிக் காரை (இ.வி) அறிமுகம் செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர்.

இத்தகைய பெரிய நிறுவனங்களின் அறிவிப்புகள் மற்றும் அறிமுகங்கள், கிரீன் கார்கள் தொழில்நுட்பத்தில் புரட்சி ஏற்படுத்துமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஹூண்டாயின் வருங்கால அறிமுகங்கள்;

ஹூண்டாயின் வருங்கால அறிமுகங்கள்;

ஹூண்டாய் நிறுவனம், பிளக்-இன், ஹைப்ரிட் மற்றும் ஹைட்ரஜன் ஃப்யூவல்-செல் அடிப்படையிலான கார்களை 2020-ஆம் ஆண்டிற்குள் அடுத்தடுத்து அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

எனினும் எலக்ட்ரிக் கார் (இ.வி) அறிமுகம் எப்போது செய்யபடும் என இதவரை எந்த விதமான தகவல்களையும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஹூண்டாய் தொடர்புடைய செய்திகள்

ஹைப்ரிட் தொடர்புடைய செய்திகள்

எலக்ட்ரிக் கார் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஹூண்டாய் உருவாக்கும் 402 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்ட எலக்ட்ரிக் கார் - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் உருவாக்கும் 402 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்ட எலக்ட்ரிக் கார் - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் உருவாக்கும் 402 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்ட எலக்ட்ரிக் கார் - கூடுதல் படங்கள்

Most Read Articles
English summary
Hyundai is planning to launch an Electric Car, with range of 402 Km. Tesla's Model 3 runs for approximately 350kms. In competition for this only, Hyundai is materialising these plans. Hyundai has already confirmed that, a new EV (Electric Vehicle) is to be launched in 2018 which runs for 322kms. Hyundai Ioniq will be launched in US, later in 2016. To know more, check here..
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X