மீண்டும் அசத்த வருகிறது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ!

By Saravana Rajan

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் தலையெடுக்க காரணமாக அமைந்த மாடல் அந்நிறுவனத்தின் சான்ட்ரோ கார்தான். அந்த நிறுவனத்தின் முதல் மாடலாக வெளிவந்த சான்ட்ரோ கார் புதிய மாடல்களுக்கு வழிவிட்டு, மார்க்கெட்டுக்கு டாடா காட்டியது.

ஆனால், கடைசி வரை சான்ட்ரோ காருக்கான மவுசு தொடர்ந்து இருந்தது. இந்தநிலையில், கனத்த இதயத்துடன் சான்ட்ரோ கார் பிரிவை இந்தியர்கள் ஏற்றுக் கொண்டனர். அருமையான டிசைன், அதிக மைலேஜ், இடவசதி, பட்ஜெட் விலை போன்றவை சான்ட்ரோ காரின் மவுசுக்கு காரணங்களாக இருந்தன.

மீண்டும் அசத்த வருகிறது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ!

இந்தநிலையில், ரெனோ க்விட், டாடா டியாகோ கார்களின் வரவால் ஹூண்டாய் நிறுவனத்திற்கு சற்று நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனை போக்கிக் கொள்வதற்கு சரியான சாய்ஸாக சான்ட்ரோ கார் இருக்கும் என ஹூண்டாய் கருதுகிறது.

மீண்டும் அசத்த வருகிறது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ!

மேலும், சான்ட்ரோ பிராண்டுக்கு இருக்கும் மவுசை தக்க வைத்துக் கொள்ளும் விதத்தில் புதிய சான்ட்ரோ காரை அறிமுகம் செய்ய ஹூண்டாய் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மீண்டும் அசத்த வருகிறது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ!

தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, வரும் 2018ம் ஆண்டில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், தற்போது விற்பனையில் இருக்கும் ஐ10 காருக்கு மாற்றாக இந்த மாடலை களமிறக்கவும் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாம்.

மீண்டும் அசத்த வருகிறது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் 5 பேர் பயணிப்பதற்கு ஏதுவான சிறப்பான இடவசதியுடன் இருக்கும். எனவே, இப்போதே வாடிக்கையாளர்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறையினர் மத்தியில் இந்த தகவல் ஆவலை கிளறியிருக்கிறது.

மீண்டும் அசத்த வருகிறது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ!

புதிய தலைமுறை ஹூண்டாய் சான்ட்ரோ கார் ரூ.1,000 கோடி முதலீட்டில் இந்த கார் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்திய விற்பனை அதிகாரிகள் அளித்த கருத்துக்களின் அடிப்படையில், ஹைதராபாத்தில் உள்ள ஹூண்டாய் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மீண்டும் அசத்த வருகிறது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ!

மேலும், புதிய சான்ட்ரோ காருக்கான புரோட்டோடைப் மாடலை ஹூண்டாய் நிறுவனத்தின் தாய் நாடான தென்கொரியாவை சேர்ந்த பொறியாளர்களால் உருவாக்கப்பட்டு வருகிறதாம். இந்த புதிய சான்ட்ரோ கார் சென்னையில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படும். இந்தியா தவிர்த்து, வெளிநாடுகளுக்கும் சென்னையிலிருந்து ஏற்றுமதியாகும்.

மீண்டும் அசத்த வருகிறது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ!

புதிய தலைமுறை ஹூண்டாய் சான்ட்ரோ காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலிலும் அறிமுகம் செய்யும் திட்டம் இருக்கிறதாம். இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும்.

மீண்டும் அசத்த வருகிறது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ!

பேஸ் மாடல் ரூ.4 லட்சம் ஆரம்ப விலையிலும், டாப் வேரியண்ட் ரூ.6 லட்சம் விலையிலும் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் அசத்த வருகிறது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ!

2018ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு, அந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் புதிய தலைமுறை ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில நொடிகளில் கார் இன்ஸ்யூரன்ஸ்... ரிலையன்ஸ் நிறுவனத்தின் புரட்சிகர திட்டம்!

சில நொடிகளில் கார் இன்ஸ்யூரன்ஸ்... ரிலையன்ஸ் நிறுவனத்தின் புரட்சிகர திட்டம்!

Most Read Articles
English summary
Read in Tamil: Hyundai To Relaunch Santro In India By 2018.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X