ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் அடிப்படையில் அசத்தலான புதிய எஸ்யூவி!

Written By:

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் டிசைன் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. அதன் அசத்தலான டிசைனுக்கும், வசதிகளுக்கும் பெரிய வரவேற்பு இருக்கிறது. இதனால், அதன் விற்பனையும் ஏகபோகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட புதிய எஸ்யூவி மாடல் ஐரோப்பாவில் வைத்து சாலை சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

2014ம் ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் இன்ட்ரேடோ என்ற பெயரில் ஹூண்டாய் நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்த கான்செப்ட் மாடலின் டிசைன் அம்சங்கள் இந்த புதிய மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், நிசான் ஜூக் காரை போன்ற சில டிசைன் சமாச்சாரங்களும் இதில் இருக்கிறது.

முகப்பை அலங்கரிக்கும் பெரிய க்ரில் அமைப்பு, இரண்டடுக்கு ஹெட்லைட் போன்றவை இந்த காரை வசீகரமாகவும், எஸ்யூவிக்கு உரிய கம்பீரத்துடன் காட்டுகிறது.

இந்த எஸ்யூவியின் பின்புறம் வழக்கமான டிசைன் தாத்பரியங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி டெயில் லைட்டுகள் டிசைன் சிறப்பின் உச்சத்தை தொடுகிறது.

இந்த புதிய எஸ்யூவி எலைட் ஐ20 காரின் பிளாட்ஃபார்மில்தான் தயாராகிறது. ஆனால், க்ரெட்டா போன்று இல்லாமல் முற்றிலும் புதிய பரிமாணத்தில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் இன்டீரியரும் நவீனத்துவம் மிகுந்ததாக இருக்கும்.

ஐரோப்பிய, அமெரிக்க மார்க்கெட்டுகளை குறிவைத்து இதில் நிறைவான பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் போன்று இல்லாமல், சில ஆஃப்ரோடு தொழில்நுட்பங்களுடன் வருவது இளைய சமுதாய வாடிக்கையாளர்களை கவரும்.

இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களில் வருகிறது. டீசல் மாடலில் 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். 6 ஸ்பீ மேனுவல் கியர்பாக்ஸ், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் மாடல்களில் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு இந்த புதிய எஸ்யூவி மாடல் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறிப்பு: ஹூண்டாய் இன்ட்ரேடோ கான்செப்ட் எஸ்யூவியின் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

English summary
Hyundai i20-Based SUV Spied Testing In Europe. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos