இந்தியாவிற்கான ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்யூவி வேரியன்ட்கள் வெளியீடு - முழு விவரம்

By Ravichandran

ஜீப் நிறுவனம் வழங்கும் இந்தியாவிற்கான ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்யூவியின் வேரியன்ட்கள் வெளியிடபட்டுள்ளது.

ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்யூவியின் வேரியன்ட்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்யூவி...

ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்யூவி...

ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்யூவி, அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் ஜீப் நிறுவனம் தயாரித்து வழங்கும் மாடல் ஆகும்.

முன்னதாக, இது 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

அறிமுகம்;

அறிமுகம்;

ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்யூவி, இந்த ஆண்டில் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், ஜீப் நிறுவனம் தற்போது ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்யூவியின் பல்வேறு வேரியன்ட்களை அறிமுகம் செய்துள்ளது.

வேரியன்ட்கள்;

வேரியன்ட்கள்;

ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்யூவி, லிமிடெட், சம்மிட் மற்றும் பெர்ஃபார்மான்ஸ் வடிவமான எஸ்ஆர்டி எனப்படும் 3 வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்யூவியின் லிமிடெட் மற்றும் சம்மிட் வேரியன்ட்கள் 3.0 லிட்டர், வி6, டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இவற்றின் இஞ்ஜின்கள் 347 ஹெச்பியையும், 570 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது. இந்த வேரியன்ட்களில் ஒரு லிட்டருக்கு 12.8 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கிறது.

எஸ்ஆர்டி;

எஸ்ஆர்டி;

ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்யூவியின் எஸ்ஆர்டி வேரியன்ட், 6.4 லிட்டர், ஹெச்இஎம்ஐ வி8 பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 475 ஹெச்பியையும், 630 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

எஸ்ஆர்டி - செயல்திறன், மைலேஜ்;

எஸ்ஆர்டி - செயல்திறன், மைலேஜ்;

ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்யூவியின் எஸ்ஆர்டி வேரியன்ட், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 4.8 நொடிகளில் எட்டிவிடும்.

இது, உச்சபட்சமாக மணிக்கு 257 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

இதன் 6.4 லிட்டர், ஹெச்இஎம்ஐ வி8 பெட்ரோல் இஞ்ஜின், ஒரு லிட்டருக்கு 7.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் உடையது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்யூவியின் 3 வேரியன்ட்களின் இஞ்ஜின்களும், 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக தான், 4 சக்கரங்களுக்கும் பவர் மற்றும் டார்க் கடத்தப்படுகிறது.

லிமிடெட்...

லிமிடெட்...

இந்திய வாகன சந்தைகளில், ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்யூவியின் லிமிடெட் வேரியன்ட், நுழைவு நிலை வேரியன்ட்டாக உள்ளது.

லிமிடெட் வேரியன்ட், ஹீட்டட் முன் வரிசை சீட்கள் மற்றும் ஹீட்டட் நடு வரிசை சீட்கள் கொண்டுள்ளது.

ஃபிரண்ட் வரிசை சீட்கள், எலக்ட்ரானிக் முறையில் அட்ஜஸ்ட் செய்யக்கூடியதாக உள்ளது. மேலும், இவை மெமரி ஃ பங்க்ஷன் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்யூவியின் லிமிடெட் வேரியன்ட், ஹீட்டட் ஸ்டீயரிங் மற்றும் ஹீட்டட் ஓஆர்விஎம்கள் மற்றும் பவர்ட் தேயில்கட் கொண்டுள்ளன.

இதன் ஹெட்லேம்ப்கள், பை-செனான் புரோஜெக்டர்களாக உள்ளன.

மேலும், இதில் வாய்ஸ் கண்ட்ரோல்கள் உடைய 5-இஞ்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மன்ட் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்யூவியின் லிமிடெட் வேரியன்ட், பல்வேறு ஏர் பேக்குகள்ம், இஎஸ்சி மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

மேலும், இதில் பொருத்தப்பட்டுள்ள டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொள்ள உதவுகிறது.

சம்மிட் வேரியன்ட்;

சம்மிட் வேரியன்ட்;

ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்யூவியின் லிமிடெட் வேரியன்ட்டின் அனைத்து அம்சங்களும், நாடு நிலை வேரியன்ட்டான சம்மிட் வேரியன்ட்டிலும் உள்ளது.

ஆனால், லிமிடெட் வேரியன்ட்டில் உள்ள 5-இஞ்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மன்ட் சிஸ்டத்திற்கு பதிலாக, சம்மிட் வேரியன்ட்டில் 8.4-இஞ்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மன்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், சம்மிட் வேரியன்ட்டில், 506W amp மற்றும் பேனராமிக் சன்ரூஃப் உடைய ஸ்லிப் டிஃப்ஃபரென்ஷியல் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

எஸ்ஆர்டி வேரியன்ட்;

எஸ்ஆர்டி வேரியன்ட்;

ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்யூவியின் ஹை-பெர்ஃபார்மான்ஸ் வேரியன்ட்டான எஸ்ஆர்டி வேரியன்ட், 19-ஸ்பீக்கர்கள் உடைய ஹார்மோன்-கார்டான் ஸ்பீக்கர் சிஸ்டம் ஸ்டாண்டர்ட் அம்சமாக கொண்டுள்ளது.

இதே 19-ஸ்பீக்கர்கள் உடைய ஹார்மோன்-கார்டான் ஸ்பீக்கர் சிஸ்டம், சம்மிட் வேரியன்ட்டில் தேர்வு முறையிலான அம்சமாக வழங்கப்படுகிறது.

மாறுபட்ட அம்சங்கள்;

மாறுபட்ட அம்சங்கள்;

ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்யூவியின், லிமிடெட் மற்றும் சம்மிட் வேரியன்ட்களில் உள்ளது போல், ஹை-பெர்ஃபார்மான்ஸ் வேரியன்ட்டான எஸ்ஆர்டி வேரியன்ட்டில் ஹில் டிஸ்சென்ட் கண்ட்ரோல் அல்லது பேனராமிக் சன்ரூஃப் பொருத்தப்படவில்லை.

அவற்றிற்கு பதிலாக, எஸ்ஆர்டி வேரியன்ட்டில், லாஞ்ச் கண்ட்ரோல் மற்றும் டிராக் மோட் வழங்கபட்டுள்ளது.

மேலும், இதில் உள்ள 4 வீல் டிரைவ் சிஸ்டம், கூடுதல் ஆன்-ரோட் பெர்ஃபார்மான்ஸ் வழங்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஜீப் செரோக்கீ எஸ்ஆர்டி எஸ்யூவி

ஜீப் பிராண்ட்டின் ரேங்லர் ட்ரெய்ல்கேட் கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம்

ஜீப் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
American carmaker Jeep has revealed the variant details of India specific Jeep Grand Cherokee SUV. Jeep Grand Cherokee will be available in 3 different variants — Limited, Summit, and performance-oriented SRT. Jeep Grand Cherokee made its Debut during 2016 Delhi Auto Expo. It has many Safety features like multiple airbags, ESC and traction control etc. To know more, check here...
Story first published: Friday, July 1, 2016, 12:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X