பிஎம்டபுள்யூ எக்ஸ்5 காரில் மும்பை முதல் லண்டன் செல்லும் இந்திய ஜோடி

By Ravichandran

ஒரு இந்திய தம்பதியினர், மும்பை மாநகரில் இருந்து இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் வரை சாலை வழி பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

சமீப காலமாக, பல்வேறு மக்கள் இப்படி நாடுகள் மற்றும் கண்டங்கள் கடந்து நெடுந்தூர பயணங்கள் மேற்கொள்வது அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆனால், மேற்குறிப்பிட்ட இந்த தம்பதியினர் வயதால் இளைஞர்கள் அல்ல. ஆனால், உள்ளத்தால் நிச்சயம் இளைஞர்களாக இருக்க வேண்டும் என்றே தெரிகிறது.

லூயிஸ் டிசோசா என்ற 61-வயதானவரும், அவரின் மனைவியான ஜேனட் டிசோசா-வும் தான் இந்த நெடுந்தூர பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். மங்களூரை சேர்ந்த இந்த ஜோடி தங்களின் இந்த அனுபவத்தை 'தி லைஃப்டைம் ஜர்னி' ('The Lifetime Journey') என பெயர் சூட்டியுள்ளனர். இந்த பயணத்தை, இந்த தம்பதியினர் பிஎம்டபுள்யூ எக்ஸ்5 கார் மூலம் மேற்கொள்ள உள்ளனர்.

லூயிஸ் டிசோசாவின் 62-ஆம் பிறந்த நாள், மே 20, 2016-ல் வருகிறது. அன்று தான், தி லைஃப்டைம் ஜர்னி என்ற இந்த பயணம், துவங்க உள்ளது. லூயிஸ் டிசோசா மற்றும் ஜேனட் டிசோசா மொத்தம் 40 நாடுகளை கடந்து செல்ல உள்ளனர். இந்த பயணத்தின் மொத்த தூரம் சுமார் 50,000 கிலோமீட்டர்களாக இருக்கும். இந்த டிசோசா தம்பதியினர், பின்தங்கிய மக்களுக்கான 2 அரசு சாரா அமைப்புகளுடன் கை கோர்த்துள்ளனர்.

மங்களூரை அடிப்படையாக கொண்டு இயங்கும் வைட் டவ்ஸ் என்ற அரசு சாரா அமைப்பும், மும்பையை அடிப்படையாக கொண்டு இயங்கும் முஸ்கான் ஃபவுன்டேஷன் என்ற இரு அமைப்புகளும், இந்த டிசோசா தம்பதியினர் மூலம் பயன் பெற உள்ளனர். இந்த டிசோசா தம்பதியினர், தங்களிம் பிஎம்டபுள்யூ எக்ஸ்5 கார் மூலம் பயணிக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும், இந்த 2 அரசு சாரா அமைப்புகளுக்கும் தலா 10 ரூபாய் சென்றடையும். மங்களூரை சேர்ந்த இந்த டிசோசா தம்பதியினர், தங்களின் பயணத்தை, ஒரு புனித நோக்கத்துடன் இணைத்து கொண்டுள்ளனர்.

indian-couple-mumbai-to-london-with-bmw-x5-drive-the-lifetime-journey

லூயிஸ் டிசோசா மற்றும் ஜேனட் டிசோசா தம்பதியினர், ஆனந்த பைய்த் மற்றும் அவரின் குடும்பத்தை கண்டு ஊக்கம் அடைந்துள்ளனர். ஆனந்த பைய்த் மற்றும் அவரின் குடும்பத்தினர், சமீபத்தில் தான் பெங்களூரூ முதல் ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் வரை கார் பயணம் மேற்கொண்டனர். இப்படி ஒருவரின் தனி வாகனங்கள் மூலம் மேற்கொள்ளபடும் பயணங்கள், நிச்சயம் சாத்தியமானது என மெய்பிக்கிறது.

லூயிஸ் டிசோசா மற்றும் ஜேனட் டிசோசா தம்பதியினருக்கு அவர்கள் மேற்கொள்ளும் தி லைஃப்டைம் ஜர்னி பயணத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்ளலாம்.

Most Read Articles
English summary
An Indian couple named Louis D'Souza - 61 years and his Wife Janet D'Souza has decided to take road trip from Mumbai to London with their new BMW X5 model. This duo from Mangalore named their experience as 'The Lifetime Journey'. Their journey begins from Mumbai on May 20, 2016, which marks Louis D'Souza's 62nd birthday. To know more, check here...
Story first published: Tuesday, May 3, 2016, 20:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X