இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவி, 2016 இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

இசுஸு மோட்டர்ஸ் நிறுவனம், தங்களின் இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவி குறித்த கூடுதல் விவரங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவி...

இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவி...

இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவி, ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் இசுஸு மோட்டர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் வாகனம் ஆகும்.

இது, இந்திய வாகன சந்தைகளில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வாகனங்களில் ஒன்றாக உள்ளது.

இந்தியாவில் பிரவேசம்;

இந்தியாவில் பிரவேசம்;

இசுஸு மோட்டர்ஸ் நிறுவனம், முன்னதாக எம்யூ-7 மற்றும் டி-மேக்ஸ் ஆகிய மாடல்களை அறிமுகம் செய்து, இந்திய வாகன சந்தைகளில் பிரவேசம் செய்தது.

இஞ்ஜின் - சர்வதேச சந்தைகள்;

இஞ்ஜின் - சர்வதேச சந்தைகள்;

சர்வதேச சந்தைகளுக்கான இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவிக்கு, 4 சிலிண்டர்கள் உடைய 3.0 லிட்டர் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 174.58 பிஹெச்பியையும், 380 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

இஞ்ஜின் - இந்திய சந்தைகள்;

இஞ்ஜின் - இந்திய சந்தைகள்;

இந்திய வாகன சந்தைகளுக்கான இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவியும், சர்வதேச சந்தைகளுக்கான இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவியில் உள்ளது போன்ற இஞ்ஜின் மற்றும் இஞ்ஜின் திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவி, ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வெளியாகும்.

இன்டீரியர்;

இன்டீரியர்;

இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவி, பல முன்னணி கார் நிறுவனங்களின் தயாரிப்புகளுடன் போட்டி போடுவதால், இதன் இன்டீரியர் சொகுசு நிறைந்ததாகவும், பிரிமியம் தரத்திலும் இருக்கும்.

சீட்டர் தேர்வுகள்;

சீட்டர் தேர்வுகள்;

இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவி, 5-சீட்டர் மாறும் 7-சீட்டர் தேர்வுகளில் வெளியாகும் என தகவல்கள தெரிவிக்கின்றன.

விற்கப்பட்ட விதம்;

விற்கப்பட்ட விதம்;

இசுஸு மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகள், முன்னதாக சிபியூ அல்லது கம்ப்லீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட வடிவிலேயே, இறக்குமதி செய்து விற்பனை செய்யபட்டு வந்தது.

உற்பத்தி;

உற்பத்தி;

இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவி, இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சிட்டி என்ற பகுதியில் அமைந்துள்ள இசுஸு கார் ஆலையில் அசெம்பிள் செய்யப்பட உள்ளது.

எதிர்பார்ப்பு;

எதிர்பார்ப்பு;

இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவி உள்ளிட்ட தயாரிப்புகள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளதால், இதன் விலை குறைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

இதனால் இசுஸு மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனைகளும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

போட்டி;

போட்டி;

இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவி, டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு என்டெவர் மற்றும் மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் ஆகிய மாடல்களுடன் போட்டி போடா வேண்டி இருக்கும்.

அறிமுகம்;

அறிமுகம்;

இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவி, இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய, இசுஸு மோட்டர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

விலை;

விலை;

இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவியின் அடிப்படை வேரியன்ட், இந்திய வாகன சந்தைகளில் சுமார் 25 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அடுத்து ஒரு கட்டுமஸ்தான எஸ்யூவியை களமிறக்கும் இசுஸு!

இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்கப் டிரக் இந்தியாவில் அறிமுகம்

இசுஸு தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

Most Read Articles
English summary
Japan-based Car manufacturer Isuzu Motors plans to launch Isuzu MU-X SUV in Indian market. This shall be launched Isuzu MU-X SUV model in India by 2016-end. Isuzu MU-X SUV will be offered with 5-seater and 7-seater option. MU-X is most likely to be assembled locally at Isuzu's facility in Sri City, Andhra Pradesh. To know more, check here...
Story first published: Friday, July 22, 2016, 13:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X