ஜாகுவார் எஃப்-பேஸ் அறிமுக தேதி வெளியாகியது - புக்கிங் துவக்கம்

Written By:

ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவி (லக்சுரி எஸ்யூவி) இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் தேதி வெளியாகியது. பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள், இந்தியாவில் தீபாவளி மற்றும் தசரா பண்டிகை காலங்களின் போது பல்வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், ஜாகுவார் நிறுவனமும், தங்களின் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளனர்.

ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவி தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் நிறுவனம், தங்களின் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவியை, இந்திய வாகன சந்தைகளில், அக்டோபர் 20-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளனர்.

புக்கிங்;

ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவியின் புக்கிங், இந்தியா முழுவதும் 23 டீலர்ஷிப்களில் ஏற்கப்பட்டு வருகிறது. இதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் தங்களின் ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவியை இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்திலும் புக்கிங் செய்து கொள்ளலாம்.

விற்கப்படும் விதம்;

இந்தியாவில் ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவி, சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதும் கட்டிமுடிக்கப்பட்ட வடிவிலேயே இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.

இந்தியாவில் உற்பத்தி;

ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவியின் உற்பத்தி இந்தியாவில் விரைவில் மேற்கொள்ள படுவதற்கான சாத்திய கூறுகள் இல்லை. எனினும், ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவி, சிகேடி அல்லது கம்ப்ளீட்லி நாக்ட் டவுன் யூனிட் எனப்படும் முறையில் ஸ்பேர்கள் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த முயற்சியும் கூட 2017-ஆம் ஆண்டு இறுதியில் இருந்தே துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

போட்டி;

ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவி, அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், இது ஏராளமான மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும். ஜாகுவார் எஃப்-பேஸ், போர்ஷே மசான், ஆடி க்யூ7, வால்வோ எக்ஸ்சி90, பிஎம்டபுள்யூ எக்ஸ்5 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

எதிர்பார்ப்பு;

ஜாகுவார் எஃப்-பேஸ் சொகுசு எஸ்யூவி, இந்தியாவில் நல்ல வரவேற்பு பெரும் என ஜாகுவார் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

விலை விவரங்கள்;

ஜாகுவார் எஃப்-பேஸ் 2.0 லிட்டர் டீசல் ப்யூர் - 68.40 லட்சம் ரூபாய்
ஜாகுவார் எஃப்-பேஸ் 2.0 லிட்டர் டீசல் பிரெஸ்டீஜ் - 74.50 லட்சம் ரூபாய்
ஜாகுவார் எஃப்-பேஸ் 3.0 லிட்டர் டீசல் ஆர்-ஸ்போர்ட் - 1.02 கோடி ரூபாய்
ஜாகுவார் எஃப்-பேஸ் 3.0 லிட்டர் டீசல் ஃபர்ஸ்ட் எடிஷன் - 1.13 கோடி ரூபாய்

குறிப்பு; இந்த அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைகள் ஆகும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar India confirms that, its all-new F-Pace luxury SUV will be launched in India on October 20, 2016. Currently, bookings for Jaguar F-Pace are being accepted at 23 Indian dealerships. Moreover, Customers can also book F-Pace through Jaguar's official website. Jaguar F-Pace luxury SUV will be offered in India as CBU (Completely Built Unit). To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos