இனி ஜாகுவார் லேண்ட் ரோவரை ஆன்லைனில் புக் செய்யலாம்

Written By:

ஜாகுவார் லேண்ட் ரோவரை, ஆன்லைனில் புக் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்லைனில் புக்கிங் செய்யும் வசதி ஜாகுவார் லேண்ட் ரோவர் ரீடேய்ளர்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு பிடித்த ஜாகுவார் லேண்ட் ரோவர் மாடல்களை இந்தியாவில் ரெஜிஸ்டர் செய்து வாங்கி கொள்ளலாம்.

இந்தியாவில், ஜாகுவார் அல்லது லேண்ட் ரோவரை கார்களை வாங்கும் போது, உயரிய வசதிகள் மற்றும் உயர்தர அனுபவத்தை வழங்கும் நோக்கிலேயே இந்த ஆன்லைன் பிளாட்ஃபாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் பிளாட்ஃபாரம்கள் மூலமாக, இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவன கார்களை சுலபமாக வாங்குவது மற்றும் பதிவு செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் தங்களின் ப்ரீ-ஓன்ட் வெஹிகிள் எனப்படும் உபயோகிக்கப்பட்ட வாகனத்தை சுலபமாக எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ள முடியும்.

இதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த வகையில் டவுன் பேமன்ட் தேர்வுகளையும், இஎம்ஐ தேர்வுகளையும் தேர்ந்தெடுத்து கொள்ளும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

இந்த ஆன்லைன் பிளாட்ஃபாரம்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. ஜாகுவார் கார்களை வாங்க www.findmeacar.in என்ற இணையதளத்தையும், லேண்ட் ரோவர் மாடல்களுக்கு www.findmeasuv.in என்ற இணையதளத்தையும் கிளிக் செய்து கூடுதல் விவரங்களை பெற்று கொள்ளலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
British luxury carmaker Jaguar Land Rover has introduced an online vehicle booking platform. It will help customers purchase and register their favorite vehicles in India. This platform also helps exchange customer's pre-owned vehicle. Customers can click here (www.findmeacar.in) for Jaguar vehicles and click here (www.findmeasuv.in) for Land Rover models. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos