புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் செடான் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

ஜாகுவார் இந்தியா நிறுவனம், தங்களின் அடுத்த தலைமுறை புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு செடானை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளனர். இங்கிலாந்தின் ஜாகுவார் நிறுவனம் உயர் தர செடான்களுக்கு உலகம் முழுவதும் புகழ் பெற்றதாக உள்ளது. கோடீஸ்வரர்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மிகவும் பிரபலமானதாக உள்ளன.

இந்நிலையில், ஜாகுவார் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அடுத்த தலைமுறை ஜாகுவார் எக்ஸ்எஃப் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

வேரியன்ட்கள்;

வேரியன்ட்கள்;

புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் செடான், ப்யூர், பிரெஸ்டீஜ் மற்றும் போர்ட்ஃபோலியோ ஆகிய 3 வேரியன்ட்களில் கிடைக்கும்.

இஞ்ஜின் - 1;

இஞ்ஜின் - 1;

புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு செடானின் 3 வேரியன்ட்களுக்கும், 4-சிலிண்டர்கள் உள்ள 2.0 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய இன்ஜீனியம் சீரிஸ் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின், 178 பிஹெச்பி பவரையும், 430 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும். இந்த இஞ்ஜின் கொண்டுள்ள புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 8.1 நொடிகளில் எட்டும்.

இஞ்ஜின் - 2;

இஞ்ஜின் - 2;

புதிய இன்ஜீனியம் சீரிஸ் இஞ்ஜினுக்கும் கூடுதலாக, பிரெஸ்டீஜ் மற்றும் போர்ட்ஃபோலியோ வேரியன்ட்களுக்கு, 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 237 பிஹெச்பி பவரையும், 340 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் கொண்ட வேரியன்ட், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7 நொடிகளில் எட்டிவிடுகிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு செடானின் 3 வேரியன்ட்களின் இஞ்ஜின்கள், 8-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலமாக தான் பின் சக்கரங்களுக்கு பவர் கடத்தப்படுகிறது.

ஆர்டபுள்யூடி;

ஆர்டபுள்யூடி;

புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு செடானின் அனைத்து மாடல்களும் ஆர்டபுள்யூடி எனப்படும் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டுள்ளது.

மோட்கள்;

மோட்கள்;

ஜாகுவார் நிறுவனம், புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு செடானுக்கு, ஜாகுவார் டிரைவ் கண்ட்ரோல் ('Jaguar Drive Control') என்ற வசதியினை வழங்கியுள்ளது.

இதன் மூலம், ஸ்டாண்டர்ட், எகோ, டைனமிக் மற்றும் ரெயின் / ஐஸ் / ஸ்னோ ஆகிய 4 மோட்களில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த டிரைவிங் மோடை தேர்வு செய்து கொள்ளலாம்.

ப்யூர் - சிறப்பு அம்சங்கள்;

ப்யூர் - சிறப்பு அம்சங்கள்;

புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு செடானில் ஏராளமான அம்சங்கள் இருக்கிறது. புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு காரின் ப்யூர் வேரியன்ட்டில் பை-ஃபங்க்ஷனல் செனான் ஹெட்லேம்ப்கள், எலக்ட்ரிக்கல் முறையில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன் சீட்கள், 8-இஞ்ச் டச் ஸ்க்ரீன், 17 இஞ்ச் அல்லாய் வீல்கள் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

பிரெஸ்டீஜ் - சிறப்பு அம்சங்கள்;

பிரெஸ்டீஜ் - சிறப்பு அம்சங்கள்;

ப்யூர் வேரியன்ட்டில் உள்ள அம்சங்களை தவிர்த்து, புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு காரின் பிரெஸ்டீஜ் வேரியன்ட்டில், லெதர் சீட்கள், டிரைவர் சீட்டிற்கான மெமரி ஃபங்க்ஷன் மற்றும் ஸ்டீயரிங் வீல் ஆகிய அம்சங்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

போர்ட்ஃபோலியோ - சிறப்பு அம்சங்கள்;

போர்ட்ஃபோலியோ - சிறப்பு அம்சங்கள்;

ப்யூர் மற்றும் பிரெஸ்டீஜ் வேரியன்ட்களில் உள்ள அம்சங்களை தாண்டி, புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் சொகுசு காரின் போர்ட்ஃபோலியோ வேரியன்ட்டில், 18-இஞ்ச் வீல்கள், 14-முறைகளில் எலக்ட்ரிக்கல் முறையில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன் சீட்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் செடான், பிஎம்டபுள்யூ 5-சீரிஸ், ஆடி ஏ6, வால்வோ எஸ்90, மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டிய நிலை உள்ளது.

விலை;

விலை;

புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் செடான் விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

புதிய ஜாகுவார் எக்ஸ்எஃப் செடான், ப்யூர், பிரெஸ்டீஜ் மற்றும் போர்ட்ஃபோலியோ ஆகிய 3 வேரியன்ட்களில் கிடைக்கும்.

ஜாகுவார் எக்ஸ்எஃப் 2.0 டீசல் ப்யூர் - 49.5 லட்சம் ரூபாய்

ஜாகுவார் எக்ஸ்எஃப் 2.0 டீசல் பிரெஸ்டீஜ் - 55.9 லட்சம் ரூபாய்

ஜாகுவார் எக்ஸ்எஃப் 2.0 டீசல் போர்ட்ஃபோலியோ - 62.10 லட்சம் ரூபாய்

ஜாகுவார் எக்ஸ்எஃப் 2.0 பெட்ரோல் பிரெஸ்டீஜ் - 55.65 லட்சம் ரூபாய்

ஜாகுவார் எக்ஸ்எஃப் 2.0 பெட்ரோல் போர்ட்ஃபோலியோ - 62.10 லட்சம் ரூபாய்

குறிப்பு;

இந்த அனைத்து விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைகள் ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

நடிகை சமந்தா பொக்கிஷமாக கருதும் அவரது ஜாகுவார் காரின் சிறப்பம்சங்கள்!

ஜாகுவார் எக்ஸ்இ ஸ்போர்ட்ஸ் சலூன் காரை, கேட்ரினா கைஃப் இந்தியாவில் அறிமுகம் செய்தார்

அடுத்த தலைமுறை ஜாகுவார் எக்ஸ்எஃப் விவரக்குறிப்புகள் வெளியீடு - முழு விவரம்

Most Read Articles
மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar has launched their new XF sedan in India. New Jaguar XF features brand's new 'Ingenium' diesel engine, and a petrol engine. It comes in 3 variants - Pure, Prestige and Portfolio. Jaguar has equipped new XF with ‘Jaguar Drive Control', which lets driver to chose between four driving modes like Standard, Eco, Dynamic, and Rain/Snow/Ice. To know more, check here...
Story first published: Wednesday, September 21, 2016, 17:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X