புதுப்பொலிவுடன் கேடிஎம் எக்ஸ்-போ ஆர் கார்கள் அறிமுகம்!

Written By:

ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் சிறந்து விளங்கும் ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் இலகு வகை ரேஸ் கார் மாடல்களையும் தயாரித்து வருகிறது. கேடிஎம் X-Bow R மற்றும் X-Bow RR ஆகிய இரு மாடல்களையும் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய கேடிஎம் எக்ஸ்-போ ஆர் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எஸ்ஸென் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த கார்களில் இருக்கும் சிறப்பம்சங்களை தொடர்ந்து காணலாம்.

கடந்த 2008ம் ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் கேடிஎம் எக்ஸ்-போ ரேஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. 2011ம் ஆண்டில் கேடிஎம் எக்ஸ்-போ ஆர் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார்கள் கிஸ்கா டிசைன், ஆடி மற்றும் டல்லாரா ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த கார் தயாரிக்கப்பட்டது.

பலமான வரவேற்பு

என்ற இலக்குடன் இந்த கேடிஎம் எக்ஸ்-போ கார்கள் தயாரிப்பு துவங்கியது. ஆனால், வாடிக்கையாளர்களிடம் கிடைத்த அமோக ஆதரவை தொடர்ந்து தற்போது உற்பத்தி இலக்கு 1,000 கார்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

விசேஷ பாடி கிட்

தற்போது எக்ஸ்-போ ஆர்ஆர் மாடலுக்கு கூடுதலாக ஏரோடைனமிக் பாடி கிட் 4 சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், இப்போது இரு கார்களையும் எளிதில் அடையாளம் கண்டு வேறுபடுத்த முடியும். ஆர்ஆர் மாடலில் முன்பக்கத்தில் ஸ்பிளிட்டர்கள், காருக்கு அடிப்பாகத்தில் விசேஷ உறை அமைப்பு, பின்புறத்தில் 30 சதவீதம் வரை கூடுதல் டவுன்ஃபோர்ஸ் தரும் ஸ்பாய்லர் ஆகியவை உள்ளன.

வசீகரிக்கும் டிசைன்

மிக வித்தியாசமான வடிவமைப்புடன் வசீகரிக்கிறது. இந்த கார் மாடல்களில் மிகச் சிறப்பான தரைப் பிடிப்பை தரும் டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

ஆடி எஞ்சின்

ஆடி கார் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. கேடிஎம் எக்ஸ்-போ ஆர் மாடலின் எஞ்சின் அதிகபட்சமாக 295 பிஎச்பி பவரையும், 407என்எம் டார்க் திறனையும் வழங்கும். எக்ஸ்-போ ஆர்ஆர் மாடல் அதிகபட்சமாக 350 பிஎச்பி பவரையும், 475 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
KTM's most manic four-wheeled creation the X-Bow RR is now madder than ever.
Please Wait while comments are loading...

Latest Photos