இந்தியா வரும் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ படங்கள்!

Written By:

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மிகவும் வெற்றிகரமான மாடல். 2013ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மிக குறைவான விலையில் அசத்தலான டிசைன், வசதிகள், மூன்று வித எஞ்சின் ஆப்ஷன்கள் என வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்தது.

இந்த நிலையில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா டியூவி300 போன்ற மாடல்களால் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. சந்தைப் போட்டி நெருக்கடியை குறைத்துக் கொள்ளும் விதத்தில், மேம்படுத்தப்பட்ட புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

அண்மையில் பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ நகரில் நடந்த ஆட்டோமொபைல் கண்காட்சியிலேயே இந்த புதிய மாடல் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சற்றே தாமதமாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஆட்டோமொபைல் கண்காட்சிக்கு சற்று முன்னதாக படங்களை வெளியிட்டுள்ளது ஃபோர்டு நிறுவனம்.

டிசைனை பொறுத்தவரையில் முகப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஃபோர்டு குகா காரிலிருந்து பல டிசைன் தாத்பரியங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஹெட்லைட் சற்று பெரிதாக்கப்பட்டு இருப்பதுடன், க்ரோம் சட்டங்களுடன் கூடிய அறுகோண வடிவ க்ரில் அமைப்பு, புதிய பனி விளக்குகள், புதிய பம்பர் அமைப்புடன் சற்று வேறுபடுத்தப்பட்டிருக்கிறது.

புதிய அலாய் வீல்கள், பின்புறத்தில் புதிய பம்பர் அமைப்பு, ஸ்கிட் பிளேட்டுகல் கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்பர் பிளேட்டுக்கு மேலாக க்ரோம் பட்டை உள்ளது. பம்பர் பெரிதாக்கப்பட்டு இருப்பதால் முன்பைவிட சற்று பெரிய சைஸ் கார் போல தெரிகிறது. பின்புற கதவில் ஸ்பேர் வீல் கொடுக்கப்படவில்லை. ஆனால், இந்தியாவில் ஸ்பேர் வீல் இருக்கும் என நம்பலாம்.

இன்டீரியரிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. டேஷ்போர்டில் வண்ண திரையுடன் கூடிய 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தாழ்வாக அமைக்கப்பட்டிருக்கும் ஏசி வென்ட்டுகள், புதிய சென்டர் கன்சோல் அமைப்பு என மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஃபோர்டு சிங்க் தொடர்பு வசதி, அதிக திறன் வாய்ந்த எஃப்எம் ரேடியோ ஆன்டென்னா மற்றும் 675 வாட் திறன் கொண்ட பேங் அண்ட் ஒலுப்சென் சவுண்ட் சிஸ்டம் டாப் வேரியண்ட்டுகளில் இருக்கும். இன்டீரியர் வண்ணங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

அமெரிக்காவில் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனை செல்கிறது. இவை 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும். ஆனால், இந்தியாவில் தற்போது வழங்கப்படும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வரும்.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் அமெரிக்க மார்க்கெட்டுகளில் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு செல்ல இருக்கிறது. அதைத்தொடர்ந்து, ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
American automaker Ford has unveiled its 2017 Ecosport SUV at the LA auto show 2016.
Please Wait while comments are loading...

Latest Photos