2015-ல் லம்போர்கினி நிறுவனம், அதிக கார்களை விற்று சாதனை நிகழ்த்தியது

By Ravichandran

லம்போர்கினி நிறுவனம், 2015-ஆம் ஆண்டில் அதிக அளவிலான கார்களை விற்று சாதனை படைத்துள்ளது.

லம்போர்கினி நிறுவனம் படைத்த இந்த சாதனை குறித்த கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

விற்பனையான கார்கள் எண்ணிக்கை;

விற்பனையான கார்கள் எண்ணிக்கை;

உலகின் மிகப்பெரிய சொகுசு கார் நிறுவனங்களில் ஒன்றான லம்போர்கினி, வழக்கமாக ஒரு ஆண்டிற்கு சுமார் 3000 கார்களை மட்டுமே விற்பனை செய்து வந்தது.

அந்த நிறுவனத்தின் சரித்திரத்தில், முதன் முறையாக 2015-ஆம் ஆண்டில் 3,245 கார்கள் விற்பனை செய்யபட்டு சாதனை படைக்கபட்டுள்ளது.

28% ஏற்றம்?

28% ஏற்றம்?

லம்போர்கினி கார் நிறுவனத்திற்கு பரவலாக உலகம் முழுவதிலும் 50 நாடுகளில் 135 டீலர்கள் உள்ளனர். இந்த டீலர்ஷிப்கள் மூலம் 2,530 கார்கள் விற்கபட்டு வந்த லம்போர்கினி கார்களின் எண்ணிக்கை 3,245 கார்கள் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்த வளர்ச்சி அதற்கு முந்தைய ஆண்டின் விற்பனையை காட்டிலும், 28 சதவிகிதம் கூடுதலான வளர்ச்சி என்பது குறிப்பிடதக்கது.

சீஇஓ பெருமிதம்;

சீஇஓ பெருமிதம்;

"2015-ஆம் ஆண்டில், லம்போர்கினி நிறுவனம் டெலிவரி செய்த அசாதாரணமான விற்பனை செயல்திறன் மற்றும் புதிய சாதனைகள் நிகழ்த்தபட்டதன் மூலம், மக்கள் லம்போர்கினி பிராண்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிபடுத்துகிறது" என ஆட்டோமொபிலி லம்போர்கினி நிறுவனத்தின் ஸ்டீஃபன் வின்கெல்மேன் தெரிவித்தார்.

உலகளாவிய பிராண்ட்;

உலகளாவிய பிராண்ட்;

லம்போர்கினி ஒரு மாபெரும் சர்வதேச அளவிலான பிராண்டாக விளங்குகிறது. இந்த நிறுவனத்திற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆஃப்ரிகா, ஆசிய பசிஃபிக் பகுதிகளில் நல்ல நிலையான விற்பனை மற்றும் டிஸ்ட்ரிப்யூஷன் அமைப்புகள் உள்ளது.

ஹூராகெனுக்கு வெற்றி;

ஹூராகெனுக்கு வெற்றி;

அறிமுகமான 18 மாதங்களில், நடைபெற்ற ஹூராகென் கார்களின் விற்பனை, அதன் முந்தைய வடிவமான கல்லார்டோவை காட்டிலும் 70 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடதக்கது.

ஹிட்டான ஹூராகென் எல்பி 610-4;

ஹிட்டான ஹூராகென் எல்பி 610-4;

லம்போர்கினி பிராண்டின் சரித்திரத்திலேயே ஹூராகென் எல்பி 610-4 மிகவும் வெற்றிகரமான பிராண்டாக திகழ்கிறது. அறிமுகம் செய்யபட்ட நாள் முதல், ஒரு ஆண்டிற்குள் லம்போர்கினி ஹூராகென் எல்பி 610-4 காரை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு லம்போர்கினி நிறுவனம் விற்றுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

லம்போர்கினி ஹுராகேன் ஸ்பைடர் எல்பி 610-4, விரைவில் இந்தியாவில் அறிமுகம்

லம்போர்கினி ஹுராகேன் காரின் 5-வது மாடலும் வருகிறது!

ரொம்பவே ஸ்பெஷலான லம்போ அவென்டேடார் தீப்பிடித்து எரிந்தது!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Lamborghini sets a huge record by selling 3,245 cars in 2015 to its customers. Lamborghini has surpassed the sales of 3,000 units mark for the first time. The Huracán LP 610-4, is the most successful V10 in Lamborghini's history. From the day of its launch, Lamborghini has sold 2,242 units of the Lamborghini Huracán in one year.
Story first published: Friday, January 29, 2016, 17:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X