அதிக மைலேஜ், செயல்திறன்... வந்துவிட்டது புதிய மஹிந்திரா பொலிரோ!

Written By:

நாட்டின் அதிகம் விரும்பப்படும் எஸ்யூவி மாடல் மஹிந்திரா பொலிரோ. விற்பனையிலேயே இதனை உணர்ந்து கொள்ள முடியும். இந்தநிலையில், அதிக மைலேஜ், செயல்திறனுடன் வடிவத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய மஹிந்திரா பொலிரோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

நீளத்தில் சுருக்கப்பட்டு மினி பொலிரோ எஸ்யூவியாக இந்த மாடலாக இது வந்திருப்பதுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த அசத்தலான புதிய மாடல் குறித்த முழுமையான விபரங்களை டிரைவ்ஸ்பார்க் தளம் உங்களுக்கு வழங்குகிறது.

மஹிந்திரா பொலிரோ பவர்+ என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. SLE, SLX மற்றும் ZLX ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் இந்த பொலிரோ கிடைக்கும்.

மஹிந்திரா பொலிரோ பவர்+ எஸ்யூவியின் நீளம் 4 மீட்டருக்குள் சுருக்கப்பட்டிருக்கிறது. அதாவது, முன்புற, பின்புற பம்பர் உள்ளிட்டவற்றின் வடிவத்தை குறைத்து நீளம் குறைக்கப்பட்டிருக்கிறது. எனவே, காருக்குள் இடவசதியில் சமரசம் இருக்காது. அதாவது, தற்போதைய மாடலில் இருக்கும் அதே இடவசதியுடன் கிடைக்கும்.

புதிய மஹிந்திரா பொலிரோ பவர்+ எஸ்யூவியில் 70 பிஎச்பி பவரையும், 195என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 1.5 லிட்டர் டி70 எம்ஹாக் டீசல் எஞ்சின் பெருத்தப்பட்டு இருக்கிறது. அதாவது, பழைய மாடலைவிட இது 13 சதவீதம் அளவுக்கு கூடுதல் செயல்திறனையும், 5 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தையும் தரும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் தொடர்கிறது.

மின்னணு திரை மூலமாக தகவல்களை அளிக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், காரின் இயக்கம் குறித்து ஓட்டுனருக்கான தகவல்களை தரும் டிரைவர் இன்பர்மேஷன் சிஸ்டம், மஹிந்திராவின் மைக்ரோ ஹைபிரிட் டெக்னாலஜி, எஞ்சின் இம்மொபைலைசர் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

பிரேக் பவரை சரிவிகிதத்தில் சக்கரங்களுக்கு செலுத்தும் இஎஸ்பி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஓட்டுனர், முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக் போன்ற முக்கிய பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது.

ஏசி சிஸ்டம், பவர் ஸ்டீயரிங், 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதி போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. மும்பையில் ரூ.6.59 லட்சம் ஆரம்ப விலையில் புதிய மஹிந்திரா பொலிரோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஆன்லைனிலையே கார் இன்ஸ்யூரன்ஸ்!

 

 

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Read in Tamil: New Mahindra Bolero Power+ Launched In India With Better Performance And Mileage.
Please Wait while comments are loading...

Latest Photos