மஹிந்திரா நிறுவனத்தின் புதிய இ2ஓ பிளஸ் அக்டோபர் 21-ல் அறிமுகம்

மஹிந்திரா எலக்ட்ரிக் நிறுவனம், மஹிந்திரா இ2ஓ பிளஸ் எலக்ட்ரிக் கார் என்ற புதிய மாடலை தயாரித்து வழங்குகின்றது. புதிய எலக்ட்ரிக் காரான இ2ஓ பிளஸ் மாடல், அக்டோபர் 21-ல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகும்

Written By:

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கும் புதிய எலக்ட்ரிக் காரான இ2ஓ பிளஸ் மாடல், அக்டோபர் 21-ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிறது. தசரா மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் இந்தியாவில் வெகு கோலாகலாமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மஹிந்திரா நிறுவனம், தங்களின் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய உள்ளனர்.

மஹிந்திராவின் புதிய இ2ஓ பிளஸ் எலக்ட்ரிக் கார் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

இ2ஓ பிளஸ்...

இ2ஓ பிளஸ், இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கும் புதிய எலக்ட்ரிக் கார் ஆகும். இது, மஹிந்திராவின் இ2ஓ எலக்ட்ரிக் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். மஹிந்திராவின் இ2ஓ பிளஸ் எலக்ட்ரிக் காரானது, இதன் முந்தைய மாடலை காட்டிலும் நடைமுறைக்கு மிகவும் உகந்த வாகனமாக உள்ளது.

இலக்கு வாடிக்கையாளர்கள்;

மஹிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன பிரிவான மஹிந்திரா எலக்ட்ரிக், இ2ஓ பிளஸ் மாடல் மூலம் புதிய மற்றும் இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

நான்கு டோர் மாடல்;

மஹிந்திரா நிறுவனம வழங்கும் இ2ஓ, 2 டோர் மாடலாகும். தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ள மஹிந்திரா இ2ஓ பிளஸ்,நான்கு டோர் வடிவமாகும்.

இஞ்ஜின் / மோட்டார்;

மஹிந்திராவின் இ2ஓ மாடலில் உபயோகிக்கப்படும் அதே மோட்டார் தான், இ2ஓ பிளஸ் மாடலிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் மோட்டார், எந்த நேரத்திலும், 25.5 பிஹெச்பியையும், 53.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

தொழில்நுட்ப தகவல்கள்;

மஹிந்திரா இ2ஓ பிளஸ் எலக்ட்ரிக் காரின் பிற தொழில்நுட்ப விவரங்களை, மஹிந்திரா எலக்ட்ரிக் நிறுவனம் இது வரை வெளியிடவில்லை. இந்த விவரங்கள், இதன் அறிமுகம் வரை ரகசியமாக பாதுகாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, மஹிந்திரா எலக்ட்ரிக் நிறுவனம், இந்த இ2ஓ பிளஸ் மாடலுக்கு புதிய ஃபிரன்ட் மற்றும் ரியர் வழங்க உள்ளது. ஒட்டுமொத்தத்தில், இதன் டிசைன், முன்பை காட்டிலும் அதிகமாக ஹேட்ச்பேக்கை போல் காட்சியளிக்கிறது.

எதிர்பார்ப்பு;

மேம்பட்ட கனெக்ட்டிவிட்டி வழங்குவதற்காக, மஹிந்திரா நிறுவனம், இந்த இ2ஓ பிளஸ் மாடளின் கேபினில், மேலும் புதிய அம்சங்களை சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra will be launching their all-new electric vehicle for Indian market on October 21, 2016. This new electric vehicle is updated version of its e2o model, which has been on offer for sometime. Indian-based manufacturer has christened this new model as the 'e2o Plus'. Previously, Mahindra e2o was a two-door model, however, e2o Plus is four-door version. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos