மஹிந்திரா கேயூவி 100 எஸ்யூவியின் வேரியண்ட்கள் - விரிவான தகவல்கள்

By Ravichandran

மஹிந்திரா கேயூவி 100 எஸ்யூவியின் வேரியண்ட்கள் குறித்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

கேயூவி 100 என்ற பெயரில் புதிய மினி எஸ்யூவியை மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதில், எந்த வேரியண்ட், உங்களுக்கு பொருத்தமானது என்று உங்களுக்கு தெரிய வேண்டுமா?

மஹிந்திரா கேயூவி 100, திறன்மிக்க 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. மஹிந்திரா கேயூவி 100, கே2, கே4, கே6 மற்றும் கே 8 ஆகிய 4 வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஏபிஎஸ் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்ட் அம்சமாகவும், ட்யூவல் ஏர்பேக்குகள் தேர்வு முறையிலும் வழங்கபடுகிறது.

mahindra-kuv-100-variants-full-details

எக்ஸ்டீரியர், இண்டீரியர்;

மஹிந்திரா கேயூவியின் பேஸ் வேரியண்ட், ட்யூவல் டோன் பம்பர்கள் மற்றும் ஸ்பாய்ளர்களை ஸ்டாண்டர்ட் அம்சங்களை அனைத்து வேரியண்ட்களிலும் கொண்டுள்ளது. பேஸ் வேரியண்ட்டில் பாதி அளவிலான வீல் கேப் பொருத்தபட்டுள்ளது.

2-வது வேரியண்ட்டான கே4 / கே4+, காரின் உடல் பாகத்தின் வண்ணத்திலேயெ ஆன கதவுகளின் ஹேண்டல்கள், ஓஆர்விஎம்கள், வீல் ஆர்ச் கிளாடிங், முன் சக்கரத்திலும், பின் சக்கரத்திலும், மட் ஃப்ளேப்கள், இண்டீரியர் வண்ணத்திலான ட்ரிம்கள் மற்றும் முழுமையான வீல் கேப்கள் ஆகியவை உள்ளன,

கே4 / கே4+ வேரியண்ட்டில், முன் க்ரிலில் குரோம் இன்சர்ட்கள், குரோம் பூச்சு உள்ள ஃபாக் லேம்ப்கள், சில்வர் பூச்சு கொண்ட பின்பக்க கதவின் ஹேண்டில்கள், பி-பில்லரில் பிளாக்-அவுட் டேப், மேற்கூரையில் மவுண்ட் செய்யபட்ட ஆண்டெனா, ரூஃப் ரெயில்கள், டோர் சைட் கிளாடிங், அல்லாய் வீல்கள், இண்டீரியரில் பியானோ பிளாக் இன்செர்ட்கள், கதவுகளின் உட்புற ஹேண்டிலில் மூட் லைட்டிங், இண்டீரியர் சில்வர் பேக்கேஜ் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இல்லை.

கே6 / கே6 வேரியண்ட்டில், குரோம் பூச்சு கொண்ட ஃபாக் லேம்ப் மற்றும் அல்லாய் வீல்களை தவிர மேற்குறிப்பிட்ட அனைத்து அம்சங்களும் உள்ளது.

மஹிந்திரா கேயூவி 100 எஸ்யூவியின் டாப் எண்ட் வேரியண்ட்டில், முன்பகுதியிலும், பின்பகுதியிலும், குரோம் பூச்சு உடைய ஃபாக் லேம்ப்கள் மற்றும் அல்லாய் சக்கரங்கள்
உட்பட மேற்குறிப்பிட்ட அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன.

அம்சங்கள்;

மஹிந்திரா கேயூவி 100 எஸ்யூவியின் டாப் எண்ட் வேரியண்ட்டில், 3.5 இஞ்ச் அளவிலான டிஸ்பிளே ஸ்கீரின், இன்-பில்ட் டிரைவர் இன்ஃபர்மேஷன் சிஸ்டம், புளூடூத் ஆடியோ மற்றும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ கால், யூஎஸ்பி, 4 ஸ்பீக்கர்கள் மற்றும் 2 ட்வீட்டர்கள் உள்ள ஆக்ஸ் சிஸ்டம், மஹிந்திராவின் புளூ சென்ஸ் ஆப் கம்பேட்டிபிளிட்டி, ஸ்டீயரிங்கில் மவுண்ட் செய்யபட்டுள்ள ஆடியோ மற்றும் ஃபோன் கண்ட்ரோல்கள், டிஆர்எல்-கள், மைக்ரோ ஹைப்ரிட் டெக்னாலஜி (இஞ்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப்), பவர்-எக்கோ மோட் (டீசல் மாடலில் மட்டும்) மற்றும் இஞ்ஜின் மோபைலைசர் ஆகிய வசதிகள் வழங்கபட்டுள்ளது.

கே2 / கே2+ மற்றும் கே4/கே4+, இஞ்ஜின் மோபைலைசர் அம்சம் உட்பட கேயூவி 100 எஸ்யூவியின் ஏராளமான அம்சங்களுடன் வெளியாகிறது.

கே6 / கே6+ வேரியண்ட் ஆனது டிஆர்எல்-கள், மைக்ரோ ஹைப்ரிட் டெக்னாலஜி (இஞ்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப்) ஆகிய அம்சங்கள் இல்லாமல் வெளியாகிறது. பவர்-இகோ மோட், டீசல் மாடலில் மட்டுமே கிடைக்கிறது. எனினும் கே6+ வேரியண்ட், ஸ்டீயரிங்கில் மவுண்ட் செய்யபட்டுள்ள ஆடியோ மற்றும் ஃபோன் கண்ட்ரோல் அம்சத்துடன் வெளியாகிறது.

சொகுசு மற்றும் வசதிகள்;

இந்த சொகுசு மற்றும் வசதி பிரிவில், மஹிந்திரா கேயூவி 100 ஏராளமான அம்சங்களை கொண்டுள்ளது. கே2 மற்றும் கே4 வேரியண்ட்களில், ஏராளமான அம்சங்கள் இல்லாத நிலை உள்ளது. கே2 மற்றும் கே4 வேரியண்ட்களில், அனைத்தும் கதவுகளிலும் பவர் ஜன்னல்கள், செண்ட்ரல் லாக்கிங், இணை-ஓட்டுநர் சீட்டுக்கு அடியில் ஹேண்டில்கள் உடைய அகற்றக் கூடிய ஸ்டோரேஜ் பின், ஃபால்லோ-மீ மற்றும் மற்றும் லீட்-மீ ஹெட்லேம்ப்கள், டிரைவர் சீட்டிற்கு சீட்-பெல்ட் வார்னிங், ரியர் வாஷ் மற்றும் வைப்பர், டீஃபாக்கர், பார்சல் டிரே, அனைத்து கதவுகளிலும் பட்டல் லேம்ப்கள் ஆகிய ஏராளமான அம்சங்கள் இல்லை.

கே 4 வேரியண்ட்டில், அனைத்து கதவுகளிலும் பவர் விண்டோக்கள், மேனுவல் செண்ட்ரல் லாக்கிங், டிரைவர் சீட்டிற்கான சீட் பெல்ட் வார்னிங், ரியர் பார்சல் டிரே ஆகிய வசதிகள் வழங்கபட்டுள்ளது.

கே 6 / கே 6+ வேரியண்ட்டில், இணை-ஓட்டுநர் சீட்டில் உள்ள ஸ்டோரேஜ் பின், அனைத்து கதவுகளிலும் பட்டல் லேம்ப்கள் ஆகிய வசதிகள் வழங்கப்படவில்லை.

போட்டிகளை சமாளிக்க ஏதுவாக கே 4 / கே 4+ வேரியண்ட்களுக்கு கூடுதல் சிறப்பு அம்சங்களை மஹிந்திரா நிறுவனம் வழங்கி இருக்கலாம்.

பாதுகாப்பு;

அனைத்து வேரியண்ட்களிலும், ட்யூவல் ஏர்பேக்குகள் தேர்வு முறையில் வழங்கபடுகிறது. டாப் எண்ட் வேரியண்ட்டில், இது ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கபடுகிறது. இதை தவிர டாப் எண்ட் வேரியண்ட்டில் ஸ்பீட் சென்சிங் (உணரும்) டோர் லாக்குகள், பேனிக் (பதட்டமான வகையில்) பிரேக் அடித்தால் ஆட்டோமேட்டிக்காக ஒளிரும் ஹஸார்ட் (ஆபத்து) வார்னிங் லேம்ப்கள் கிராஷ் நடைபெரும் போது பானட் ஒபனிங் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுள்ளது.

மேலும், டாப் எண்ட் வேரியண்ட்டில் ஆண்டி-தெஃப்ட் செக்யூரிட்டி அலாரம், ரியர் சீட்டில் மவுண்ட் செய்யபட்டுள்ள ஐசோஃபிக்ஸ் (ISOFIX) சைல்ட் சிட் ஆகிய அம்சங்கள் உள்ளது. பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை பொருத்த வரையில், மஹிந்திரா நிறுவனம் முன்னோடியாக விளங்கும் பல்வேறு அம்சங்களை வழங்கியுள்ளது.

விலைகள்;

மஹிந்திரா கேயூவி 100 எஸ்யூவியின் விலைகள், பெட்ரோல் வேரியண்ட்டிற்கு 4.48 லட்சம் ரூபாயில் இருந்தும், டீசல் வேரியண்ட்டிற்கு 5.33 லட்சம் ரூபாயில் இருந்தும், துவங்குகிறது. டீசல் இஞ்ஜின் கொண்ட டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை 6.95 லட்சம் ரூபாயில் துவங்குகிறது.

குறிப்பு; இந்த அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலைகள் ஆகும்.

Most Read Articles
English summary
Mahindra recently launched their 'Young SUV' - KUV100. It became a big hit among Indian customers. KUV100 is powered with 1.2litre petrol and diesel engines with four variants - K2, K4, K6 and K8. Which variants would suit you the most?.. Let us look at all these variants in detail. To know more about the different variants of Mahindra KUV100, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X