இந்தியாவில் பட்டை கிளப்பிய மாருதி 800, சீனாவில் மறுபிறப்பு எடுத்துள்ளது

By Ravichandran

இந்தியாவில் நீண்ட காலமாக பட்டை கிளப்பிய மாருதி 800, தற்போது சீனாவில் மறுபிறப்பு எடுத்துள்ளது.

சீனாவில் மறுபிறப்பு எடுத்துள்ள மாருதி 800 குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

மாருதி 800...

மாருதி 800...

மாருதி சுஸுகி நிறுவனம் மூலம் தயாரித்து வழங்கபட்ட மாருதி 800 தான், இந்தியாவில் இரண்டாவது மிக நீண்ட காலத்திற்கு தயாரிக்கபட்டு வந்த கார் ஆகும்.

ஆயிரக்கணக்கான குடும்பங்களில் இது தான் முதல் காராக திகழ்ந்தது. இந்தியாவில் மட்டும் சுமார் 27 கார்கள் விற்றபின், இது 2013-ஆம் ஆண்டில் விற்பனையில் இருந்து விலக்கி கொள்ளபட்டது.

மறு பிறவி;

மறு பிறவி;

மிக எளிமையான மாருதி 800, தற்போது ஜியாங்க்னான் டிடி (Jiangnan TT) என்ற பெயரில் சீனாவில் மறு பிறவி எடுத்துள்ளது. இது தான், சீனாவில் மிகவும் விலை குறைந்த காராக உள்ளது.

ஜியாங்க்னான் டிடி, ஸோட்யே ஆட்டோமொபைல் (Zotye Automobile) எனப்படும் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியாங்க்னான் ஆட்டோ நிறுவனம் மூலம் விற்கபட்டு வருகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

சீனாவில், ஜியாங்க்னான் டிடி என்ற பெயரில் மறு பிறவி எடுத்துள்ள மாருதி 800, 800சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 36 பிஹெச்பியையும், 60 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஜியாங்க்னான் டிடி காரின் 800சிசி இஞ்ஜின், 4-ஸ்பீட் கியர்பாக்ஸுடேன் இணைக்கபட்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

சீனாவில் வழங்கபடும் ஜியாங்க்னான் டிடி, ஒரு லிட்டருக்கு 19.23 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

உற்பத்தி விவரம்;

உற்பத்தி விவரம்;

சுஸுகி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட உரிமம் மூலம், ஜியாங்க்னான் ஆட்டோ நிறுவனம், ஜியாங்க்னான் டிடி காரை உற்பத்தி செய்து வருகிறது.

சுஸுகி நிறுவனம், உற்பத்தி மற்றும் ரீடெயிலிங் பொறுப்பை ஸோட்யே ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

டிசைன்;

டிசைன்;

சீனாவில், ஜியாங்க்னான் டிடி என்ற பெயரில் விற்கப்படும் மாருதி 800, குளோன் எனப்படும் நகலி அல்ல. ஜியாங்க்னான் டிடி, ஒரிஜினல் டிசைன் கொண்ட கார் ஆகும்.

இலக்கு வாடிக்கையாளர்கள்;

இலக்கு வாடிக்கையாளர்கள்;

ஜியாங்க்னான் ஆட்டோ நிறுவனம், தாங்கள் உற்பத்தி செய்யும் ஜியாங்க்னான் டிடி காரை சீனாவின் நாட்டுப்புற பகுதிகளில் வாழும் மக்களை இலக்கு வாடிக்கையாளர்களாக கொண்டு களமிறக்க திட்டமிட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

ஜியாங்க்னான் டிடி கார் ஆனது, மாருதி 800 காரை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில சிறிய அளவிலான மாற்றங்களை தவிர பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

ரூஃப் ரெயில்ஸ் மற்றும் ரியர் விண்ட்ஷீல்ட் ஸ்பாய்லர் ஆகியவை அனைத்து வேரியன்ட்களிலும், ஸ்டாண்டர்ட் அம்சங்களாக வழங்கபடுகிறது.

மற்றபடி, ஜியாங்க்னான் டிடி மற்றும் மாருதி 800 ஆகிய மாடல்களுக்கு இடையில், டிசைன் மற்றும் செயல்திறன் போன்ற விஷயங்களில் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை என்றே கூறலாம்.

சரித்திரம் கொண்ட மாருதி 800...

சரித்திரம் கொண்ட மாருதி 800...

மாருதி 800, சீனாவில் அறிமுகம் செய்யபடுவதற்கு முன்பு, அதன் ஒரிஜினல் வடிவத்தில் இந்தியாவில் நீண்ட மற்றும் புகழ்மிக்க வரலாறு கொண்டிருந்தது.

சுஸுகி நிறுவனம் வழங்கி வந்த ஆல்ட்டோ (சென்) மாடல், சில ஆண்டுகளுக்கு பின் விலக்கி கொள்ளபட வேண்டிய நிலை ஏற்பட்டது.

விலை;

விலை;

ஜியாங்க்னான் டிடி மாடல், சீனாவில் 15,800 யுவான் (இந்திய மதிப்பில் 1.67 லட்சம் ரூபாய்) என்ற ஆரம்ப விலையில் விற்கபடுகிறது.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

சீனாவில், ஜியாங்க்னான் டிடி என்ற பெயரில் விற்கப்படும் மாருதி 800 தான் அங்கு மிகவும் விலை குறைந்த காராக உள்ளது. இதற்கான டிமான்ட் அவ்வளவு குறைவாக இருப்பதால் தான், அதன் விலை அவ்வளவு குறைவாக இருகிறது என்ற கருத்தும நிலவுகிறது.

தவிர்க்க முடியாத காரணங்களால் மாருதி 800 விலக்கி கொள்ளப்பட வேண்டிய நிலை வருமா அல்லது இந்தியாவில் பட்டையை கிளப்பியது போல், சீனாவிலும் சரித்திரம் படைக்குமா என காத்திருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி ஆல்ட்டோ காரின் விற்பனை இமாலய சாதனையை எட்டுகிறது

இந்த மாதத்துடன் 800 கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தும் மாருதி

மாருதி 800 தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஜியாங்க்னான் டிடி - மாருதி 800 - கூடுதல் படங்கள்

ஜியாங்க்னான் டிடி - மாருதி 800 - கூடுதல் படங்கள்

ஜியாங்க்னான் டிடி - மாருதி 800 - கூடுதல் படங்கள்

ஜியாங்க்னான் டிடி - மாருதி 800 - கூடுதல் படங்கள்

ஜியாங்க்னான் டிடி - மாருதி 800 - கூடுதல் படங்கள்

ஜியாங்க்னான் டிடி - மாருதி 800 - கூடுதல் படங்கள்

ஜியாங்க்னான் டிடி - மாருதி 800 - கூடுதல் படங்கள்

ஜியாங்க்னான் டிடி - மாருதி 800 - கூடுதல் படங்கள்

ஜியாங்க்னான் டிடி - மாருதி 800 - கூடுதல் படங்கள்

ஜியாங்க்னான் டிடி - மாருதி 800 - கூடுதல் படங்கள்

ஜியாங்க்னான் டிடி - மாருதி 800 - கூடுதல் படங்கள்

ஜியாங்க்னான் டிடி - மாருதி 800 - கூடுதல் படங்கள்

ஜியாங்க்னான் டிடி - மாருதி 800 - கூடுதல் படங்கள்

ஜியாங்க்னான் டிடி - மாருதி 800 - கூடுதல் படங்கள்

ஜியாங்க்னான் டிடி - மாருதி 800 - கூடுதல் படங்கள்

Most Read Articles
English summary
Maruti 800 is second longest production car in India. It was discontinued in 2013, after selling nearly 27 lakh units in India. Maruti 800 has got rebirth in China and in name of Jiangnan TT. It is cheapest car in China. Jiangnan TT is sold by Jiangnan Auto, subsidiary of Zotye Automobile. Jiangnan TT Price starts from 15,800 yuan, (Rs. 1.67 lakhs). To know more, check here...
Story first published: Monday, May 23, 2016, 19:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X