எங்கு வேண்டுமானாலும் செல்ல தூண்டும் மாருதி ஆல்ட்டோ 800

By Ravichandran

இனிய வாசகர்களே, நாம் ஒரு வித்தியாசமான விளையாட்டை விளையாடுவோமா?

இந்த விளையாட்டின் பெயர் 'ஹேவ் யூ எவர்?' ('Have you ever?')

ஹேவ் யூ எவர் என்பதன் பொருள், எப்போதாவது செய்திருக்கிறாயா?

ஹேவ் யூ எவர் விளையாட்டை விளையாடியவர்களுக்கு, இது எப்படி என்ற விவரங்கள் தெரியும். இது விளையாடாதவர்களுக்கு, இது எப்படி தொடர்கிறது என பின்வரும் பத்திகளில் தெரிந்து கொள்ளலாம்.

எப்போதாவது மலை ஏற்றம் செய்திருக்கிறாயா?

இல்லை.

சரி, அடுத்த கேள்விக்கு செல்லலாம்.

வருடம் முழுவதும், ஃபேஸ்புக் உபயோகிக்காமல் இருந்திருக்கிறாயா?

இல்லையா?

சரி, அடுத்த தேர்விற்கு செல்லலாம்.

டிராஃபிக் ஜாம்மில், 3 மணி நேரம் அல்லது அதற்கும் கூடுதலான நேரம் சிக்கி தவித்தீர்களா?

சென்னை, பெங்களூரு அல்லது மும்பை போன்ற மாநகரங்களில் வசிப்பவர்களுக்கு, நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்த அனுபவங்கள் உங்கள் வாழ்வில் அடிக்கடி நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளது.

நல்லது.

நீங்கள் எப்போதாவது அதிக வேலைப்பளுவில் இருக்கும்போது, காரை எடுத்துக்கொண்டு உங்களுக்கு அமைதி தரும் இடத்திற்கு தப்பிக்க நினைத்ததுண்டா?

ஆமாம் தானே?

எங்களின் யூகம் சரி தான்.

இப்படி அனைவரும், நமது வாழ்வில் அனுதினமும் இந்த விஷயத்தை ஒரு முறையாவது உணர்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளது.

நீங்கள் அலுவலகத்தில் கடுமையான அனுபவங்களை எதிர் கொண்டிருக்கலாம் அல்லது முடிவே இல்லாத நீண்ட காலம் படிப்பில் மூழ்கி இருந்திருக்கலாம் அல்லது உங்களது நண்பருக்கு பிடித்த உணவகத்தில், அவரது பிறந்தநாளை கொண்டாட நினைந்திருக்கலாம் அல்லது பயணங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட நண்பர்களுடன் வெளியே சாலை பயணம் மேற்கொள்ள நினைத்திருக்கலாம்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இடைவேளை / சரியாக திட்டமிடாத பயணங்கள் / நல்ல ஜில்லென்று பட்டையை கிளப்பும் மழையில் சமோசா-டீ குடிக்க வேண்டி வெகு தூரம் செல்வது, அல்லது இது போன்ற எந்த விதமான திடீரென முடிவு செய்யும் பயணங்களாக இருந்தாலும், அனைத்தும் நம் நட்பு வட்டத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு நண்பர்கள், எங்கேனும் போகலாமா ("Toh Chalein Kya?" - தோ சலேன் கியா?) என்று கேட்கும் போது தான் துவங்குகிறது.

மேலும், இதுபோன்று திடீரென முடிவு செய்யும் பயணங்கள், வழக்கமாக நாம் செல்லும் இடங்களுக்கு மேற்கொள்ளப்படுவதில்லை. இத்தகைய பயணங்கள், நாம் அருங்காட்சியகம் அல்லது பூங்காவிற்கு செல்லும் பயணங்கள் போல் இருக்காது. நம்மில் சில நண்பர்கள், காஃபி அருந்துவதர்காகவோ அல்லது விருந்தில் பங்கேற்பதற்காக விமான பயணம் மேற்கொண்டதாக கூற கேட்டிருக்கலாம். இத்தகைய அனுபவங்கள், சிறந்த உதாரணமாக கூறலாம்.

இத்தகைய விஷயங்களை ஜெய்ப்பூர், கொச்சி, ஹைதராபாத், சண்டிகர், மும்பை, கொல்கத்தா, பூனே, டெல்லி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட 10 நகரங்களை சேர்ந்த ஆல்ட்டோ கார் உரிமையாளர்கள் பகிர்ந்து கொள்ளும் விதத்தில், பிரச்சாரம் ஒன்றை மாருதி நடத்தியது. புதிய அல்லது இதுவரை யாரும் செல்லாத பாதைகளில் பயணித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் அமைந்தது. அதாவது, வர்த்தக ரீதியான இடங்களுக்கு செல்லாமல் வித்தியாசமான இடங்களுக்கு சென்ற அனுபவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இதற்காக 10 நாட்கள் காலக்கெடுவுடன், தங்களது வாடிக்கையாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில், சமூக வலைதளங்களில் ஒரு பிரச்சார நடவடிக்கையை மேற்கொண்டது மாருதி கார் நிறுவனம். இந்த பிரச்சார நடவடிக்கை, கடந்த 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்த பிரச்சார நடவடிக்கையின் போது, பிற வாடிக்கையாளர்களும், தாங்கள் பயணம் மேற்கொண்டு எடுத்து கொண்ட படங்களை #TohChaleinKya என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி, அதன் பின்னர் தாங்கள் பயணம் மேற்கொண்ட இடத்தில் பெயரை சேர்த்து பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர். இது பிற ஆல்ட்டோ உரிமையாளர்களுக்கும், சமூகவலைதள வாசிகளுக்கும் விருந்தாக அமைந்தது.

ஒன்றை ஒப்பு கொண்டு தான் ஆக வேண்டும். எதிர்பாராத இடங்களுக்கு மேற்கொள்ளப்படும் திடீர் பயணங்கள் எப்போதுமே, த்ரில்லையும், வித்தியாசமான அனுபவங்களை பெறுவதாக அமைகிறது. அந்த பயணங்கள் வாழ்க்கையில் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அதிகப்படுத்தும் விஷயமாகவே கூறலாம்.

இப்படி, எதிர்பாராத இடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ள நமக்கு மிகுந்த உற்ற துணையாக விளங்குவதில், மாருதி ஆல்ட்டோ 800 காருக்கும் முக்கிய பங்குண்டு என்றால் அது மிகையாகாது.

இன்னும் ஏன் காத்து கொண்டிருக்கிறீர்கள்?

#TohChaleinKya

Most Read Articles
English summary
Maruti conducted Campaign to bring together their Maruti Alto 800 customers. Maruti requested their customers to post their pictures of storytellers from 10 cities - Jaipur, Lucknow, Cochin, Hyderabad, Chandigarh, Mumbai, Kolkata, Pune, Delhi, and Bangalore. Photo of places of interest were shared by Alto 800 customers using hashtag #TohChaleinKya, followed by city name. To know more, check here...
Story first published: Tuesday, June 28, 2016, 14:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X