அழகு கூட்டப்பட்ட மாருதி பலேனோ கார்... எப்படி இருக்கிறது?

Written By:

ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, அதே ரகத்திலான புதிய மாடலாக மாருதி பலேனோ கார் அறிமுகம் செய்யப்பட்டது.

ஸ்டைலான தோற்றம், பிரிமியம் வசதிகள், அதிக இடவசதியுடன் வந்த மாருதி பலேனோ கார் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற மாடலாக மாறியிருக்கிறது.

இதுவரை மாருதி நிறுவனத்தின் ஸ்டைலான மாடலாக வலம் வந்த ஸ்விஃப்ட் காரைவிட சிறந்த சாய்ஸாக மாறியது. இந்த நிலையில், பலேனோ காரின் அழகை கூடுதலாக்கும் வகையில் விசேஷ மாடல் ஒன்றை பெங்களூரை சேர்ந்த எம்.பி.டிசைன் மோட்டோடிரென்ட்ஸ் நிறுவனம் வடிவமைத்து உள்ளது.

மாருதி பலேனோ காரின் தோற்றத்தை மேலும் மிடுக்காகும் வகையில் இந்த கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக சிவப்பு வண்ண மாருதி பலேனோ கார் தேர்வு செய்து அழகு கூட்டப்பட்டு இருக்கிறது.

முன்புறத்தில் பம்பர் லிப் சேர்க்கப்பட்டு மிரட்டலாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. பளபளப்பு மிகுந்த கூரை, கருப்பு வண்ண அலாய் வீல்கள், கருப்பு வண்ண பில்லர்கள், கருப்பு வண்ண ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட டெயில்லைட்டுகளுடன் புதிய மாருதி பலேனோ கார் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

முக்கிய மாற்றமாக முன்புறத்தில் மேல் நோக்கி திறக்கும் சிசர் கதவுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதனால், சில சூப்பர் கார்கள் போன்ற விசேஷ கதவு வடிவமைப்பை மாருதி பலேனோ கார் பெற்றிருக்கிறது. அதுமட்டும் இல்லை, 17 அங்குல டயர்கள், பானரோமிக் சன்ரூஃப் ஆகியவையும் இடம்பெற்று இருக்கிறது.

காரின் இன்டீரியரிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் அழகு கூட்டப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டு, அப்ஹோல்ஸ்ட்ரி, பக்கவாட்டில் சிவப்பு வண்ண லெதர் அலங்காரம் மூலமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கிறது.

ரேஸ் கார்கள் போன்று பக்கெட் இருக்கைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இது காரின் தோற்றத்திற்கு ஏற்றவாறு இன்டீரியர் மாற்றமாக இருக்கிறது.

கஸ்டமைஸ் செய்யப்பட்ட மாருதி பலேனோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், சிவிடி கியர்பாக்ஸும் கொடுக்கப்பட்டு இருக்கிரது. கே அண்ட் என் ஏர் ஃபில்டர் மற்றும் எஃப்ஆர்கே ஃபுல் எக்சாஸ்ட் சிஸ்டம் மூலமாக செயல்திறன் கூட்டப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, எஞ்சின் பவர் 83 பிஎச்பி என்ற அளவில் சற்றே அதிகரித்துள்ளது.

English summary
The Maruti Suzuki Baleno has been modified to make it look more sportier with the scissor doors like a supercar.
Please Wait while comments are loading...

Latest Photos