ஏஎம்டி உடைய சுஸுகி இக்னிஸ் மினி-எஸ்யூவி இந்தோனேஷியாவில் காட்சிபடுத்தப்பட்டது

By Ravichandran

மாருதி சுஸுகி நிறுவனம் தயாரிக்கும் சுஸுகி இக்னிஸ் மினி-எஸ்யூவி இந்தோனேஷியாவில் காட்சிபடுத்தப்பட்டது. ஜிஐஐஏஎஸ் அல்லது கைகிண்டோ இந்தோனேஷியா இன்டர்நேஷனல் ஆட்டோ ஷோ 2016 (GAIKINDO Indonesia International Auto Show (GIIAS) 2016) என்ற ஆட்டோ ஷோ இந்தோனேஷியாவில் நடை பெற்று வருகிறது.

இது பிஎஸ்டி சிட்டியில் உள்ள இந்தோனேஷியா கன்வென்ஷன் செண்டர் என்ற பகுதியில், 11 ஆகஸ்ட் முதல் 21 ஆகஸ்ட் வரை நடைபெறுகிறது.

சுஸுகி இக்னிஸ் மினி-எஸ்யூவி, இந்திய வாகன சந்தைகளிலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக உள்ளது.

சுஸுகி இக்னிஸ் மினி-எஸ்யூவி தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

சுஸுகி இக்னிஸ் மினி-எஸ்யூவி...

சுஸுகி இக்னிஸ் மினி-எஸ்யூவி...

சுஸுகி இக்னிஸ் மினி-எஸ்யூவி, முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டது.

மாருதி சுஸுகி நிறுவனம், இந்த மினி-எஸ்யூவியை சமீபகாலமாக டீஸ் செய்து வருகிறது. இந்நிலையில், ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடைய சுஸுகி இக்னிஸ் மினி-எஸ்யூவி இந்தோனேஷியாவில் காட்சிபடுத்தப்பட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இந்தோனேஷியாவிற்கான மாருதி சுஸுகி நிறுவனத்தின் சுஸுகி இக்னிஸ், 1.2 லிட்டர் விவிடி பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 83 பிஹெச்பியையும், 115 என்எம் டார்க்கையும் வேயளிப்பத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

சுஸுகி இக்னிஸ் மினி-எஸ்யூவியின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவிற்கான விவரக்குறிப்புகள்;

இந்தியாவிற்கான விவரக்குறிப்புகள்;

பலேனோ மாடலில் பொருத்தபட்டுள்ள அதே இஞ்ஜின் தான், இந்தியாவிற்கான சுஸுகி இக்னிஸ் மினி-எஸ்யூவியில் பொருத்தப்படும்.

தேர்வு முறையிலான டீசல் இஞ்ஜின் கொண்ட வேரியன்ட், வரும் காலங்களில் அறிமுகம் செய்யப்படும்.

அறிமுகம்;

அறிமுகம்;

சுஸுகி இக்னிஸ், இந்தியாவில் வரும் பண்டிகை காலங்களில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறு விற்பனை?

எவ்வாறு விற்பனை?

சுஸுகி இக்னிஸ், இந்திய வாகன சந்தைகளில், வழக்கமான டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை செய்யப்படுமா அல்லது நெக்ஸா மையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுமா என்பது குறித்து எந்த விதமான தெளிவான தகவல்களும் இது வரை வெளியாகவில்லை.

போட்டி;

போட்டி;

இந்திய வாகன சந்தைகளை பொருத்த வரை, சுஸுகி இக்னிஸ், மஹிந்திரா கேயூவி1OO மாடலுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

சுஸுகி இக்னிஸ் மினி-எஸ்யூவியின் அடிப்படை வேரியன்ட், 4.5 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி சுஸுகி இக்னிஸ் கான்செப்ட் கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது

மாருதி நிறுவனம் வழங்கும் மாருதி சுஸுகி இக்னிஸ் ஸ்பை படங்கள் வெளியாகியது

மாருதி சுஸுகி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Suzuki Ignis Mini-SUV with AMT was showcased at GAIKINDO Indonesia International Auto Show (GIIAS) 2016. This GIIAS takes place on 11 to 21 August 2016 at Indonesia Convention Exhibition (ICE), BSD City. Powering Suzuki Ignis in Indonesia will be 1.2-litre VVT petrol engine, which is mated to an optional 5-speed manual or an AMT system. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X