புதிய மாருதி இக்னிஸ் காரின் முக்கிய தகவல்கள் வெளியீடு!

புதிய மாருதி இக்னிஸ் கார் அறிமுகம் மற்றும் முக்கியத் தகவல்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி இக்னிஸ் கார் கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், முதல்முறையாக புத்தம் புதிய மாருதி இக்னிஸ் காரின் தயாரிப்பு நிலை மாடல் நேற்று இரவு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போது வெளியிடப்பட்ட முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

முதல்முறையாக இந்தியர்களுக்கு மாருதி இக்னிஸ் கார் தரிசனம்

அடுத்த மாதம் 13ந் தேதி மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதை மாருதி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் இந்த புதிய காருக்கான முன்பதிவு துவங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக இந்தியர்களுக்கு மாருதி இக்னிஸ் கார் தரிசனம்

இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வர இருப்பது தெரிந்ததே. ஆனால், இரண்டு மாடல்களிலுமே மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட ஆப்ஷனிலும் வருவது புதிய தகவல்.

முதல்முறையாக இந்தியர்களுக்கு மாருதி இக்னிஸ் கார் தரிசனம்

பட்ஜெட் விலையில் அதிக பிரிமியம் அம்சங்களுடன் அர்பன் க்ராஸ்ஓவர் ரகத்தில் மாருதி இக்னிஸ் கார் வர இருக்கிறது. அதாவது, புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

முதல்முறையாக இந்தியர்களுக்கு மாருதி இக்னிஸ் கார் தரிசனம்

பக்கவாட்டில் அதிக பளபளப்பு மிகுந்த கிளாஸ் ஃபினிஷ் கருப்பு வண்ண 15 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் வடிவமைப்பு அனைவரையும் கவரும். வீல் ஆர்ச்சுகள் மற்றும் கதவுகளில் பாடி கிளாடிங் எனப்படும் பிளாஸ்டிக் சட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

முதல்முறையாக இந்தியர்களுக்கு மாருதி இக்னிஸ் கார் தரிசனம்

இந்த காரின் மற்றொரு சிறப்பம்சம், இரட்டை வண்ணத்தில் வருகிறது. அதாவது, நீல வண்ண காரின் கூரை வெள்ளை மற்றும் கருப்பு வண்ணத்திலும், சிவப்பு வண்ணக் காரின் மேற்கூரை கருப்பு நிறத்திலும் இருக்கும். இவை டாப் வேரியண்ட்டில் கிடைக்கும்.

முதல்முறையாக இந்தியர்களுக்கு மாருதி இக்னிஸ் கார் தரிசனம்

இந்த கார் 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வருவதுடன், மினி எஸ்யூவி மாடலாக கருதும் அம்சங்களை கொண்டுள்ளது. ஜப்பானில் விற்பனை செய்யப்படும் இக்னிஸ் காரில் இருக்கும் அதே அம்சங்கள் கொண்ட மாடல்தான் இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது.

முதல்முறையாக இந்தியர்களுக்கு மாருதி இக்னிஸ் கார் தரிசனம்

பொதுவாக, மாருதியின் பிரபல மாடல்களின் இன்டீரியர் ஒரே மாதிரியாக இருப்பது சலிப்பு ஏற்படுத்தும். ஆனால், இந்த காரின் உட்புற வடிவமைப்பும் புதிது என்பது மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

முதல்முறையாக இந்தியர்களுக்கு மாருதி இக்னிஸ் கார் தரிசனம்

டேஷ்போர்டு அமைப்பு, ஏசி வென்ட்டுகள் அமைப்பு, டேஷ்போர்டில் மிக பிரம்மாண்டமான திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கவர்ச்சியான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் என அசத்துகிறது. இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே என இரண்டு சாஃப்ட்வேர்களையும் சப்போர்ட் செய்யும் என தெரிகிறது.

முதல்முறையாக இந்தியர்களுக்கு மாருதி இக்னிஸ் கார் தரிசனம்

இந்த காருக்கு ஏராளமான ஆக்சஸெரீகளுடன் கஸ்டமைஸ் செய்து கொள்வதற்கான ஐ-கிரியேட் பேக்கேஜையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இது காருக்கு கூடுதல் கவர்ச்சியையும், தனித்துவத்தையும் ஏற்படுத்தி தரும்.

முதல்முறையாக இந்தியர்களுக்கு மாருதி இக்னிஸ் கார் தரிசனம்

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் உயிர் காக்கும் காற்றுப் பைகள் இந்த காரில் நிரந்தர பாதுகாப்பு ஆக்சஸெரீயாக இடம்பெறுகிறது. இலகு எடையுடன், அதிக உறுதியான சேஸியில் உருவாக்கப்பட்டிருப்பதால், அதிக நிலைத்தன்மை கொண்ட காராக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

முதல்முறையாக இந்தியர்களுக்கு மாருதி இக்னிஸ் கார் தரிசனம்

ரூ.4.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவியுடன் இந்த கார் நேரடியாக போட்டி போடும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki will add another model to the premium NEXA offerings, the AMT variants of the Ignis for both petrol and diesel has been confirmed.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X