மாருதி இக்னிஸ் காரின் பிரத்யேக படங்கள்... நிச்சயம் ஒரு ஐடியாவுக்கு வந்துடலாம்!

மாருதி இக்னிஸ் காரின் பிரத்யேக படங்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

மாருதி நிறுவனத்திடமிருந்து அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல் புதிய இக்னிஸ். கான்செப்ட் நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரின் தயாரிப்பு நிலை மாடல் நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட பிரத்யேக படங்களை இந்த செய்தியில் காணலாம். இந்த படங்களின் மூலமாக நிச்சயம் இந்த காரின் சிறப்பம்சங்களை போதிய அளவு தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும் என்று நம்புகிறோம்.

மாருதி இக்னிஸ் காரின் முகப்புத் தோற்றம். புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், சுஸுகி லோகோவுடன் கூடிய முகப்பு க்ரில் அமைப்பை காணலாம். ஹெட்லைட்டுகளும், முகப்பு க்ரில் அமைப்பும் சுற்றிலும் க்ரோம் பீடிங் மூலமாக ஒரே அமைப்பாக காட்சி தருகிறது.

பக்கவாட்டில் மிக முக்கிய அம்சமாக சைடு மிரர்களில் கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, கூரையுடன் ஒத்துப் போகும் வகையில் இந்த வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.

இந்த காரின் வீல் ஆர்ச்சுகள், கதவுகளில் பிளாஸ்டிங் கிளாடிங் சட்டங்கள் பொருத்தப்பட்டிருப்பதை காணலாம்.

பின்புறத்தில் வசீகரிக்கும் டெயில் லைட்டுகள் மற்றும் வலிமையான பிளாஸ்டிக் சட்டம் பொருத்தப்பட்டுள்ளது.

மிக வித்தியாசமான வடிவத்தில் கருப்பு வண்ண அலாய் வீல்கள் மிகவும் தனித்துவமான தோற்றத்தை பெற்றுத் தருகிறது. வெளிச்சந்தையில் கிடைக்கும் அலங்கார அலாய் வீல்கள் போன்றே இது இருப்பது கூடுதல் சிறப்பு.

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகளுடன் எல்இடி பகல்நேர விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

க்ரோம் குடுவை அமைப்புக்குள் இருக்கும் பனி விளக்குகள் கவர்ச்சியாக இருக்கின்றன. அதற்கு அருகிலும் சிறிய க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

உடைமைகள் மற்றும் பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூம் இடவசதியை காணலாம்.

டெயில் கேட் போதிய அளவு மேலே தூக்கிக் கொள்வதால் பூட் ரூமில் பொருட்களை வைத்து எடுப்பதற்கு எளிதாக இருக்கும். சராசரி உயரமுடையவர்கள் குனிந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

பின் இருக்கை இடவசதியை இந்த படத்தின் மூலமாக அறிந்துகொள்ள முடியும் என நம்புகிறோம்.

டேஷ்போர்டின் நடுநாயமாக வீற்றிருக்கும் பெரிய திரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம்.

கையை வைத்துக் கொள்வதற்கு ஏதுவாகவும், கதவை எளிதாக திறப்பதற்கு ஏதுவாக கொடுக்கப்பட்டிருக்கும் கைப்பிடியும் காணலாம்.

அலுமினிய பட்டை அலங்காரத்துடன் கூடிய கவர்ச்சிகரமான ஸ்டீயரிங் வீல். கட்டுப்பாட்டு சுவிட்சுகள் மற்றும் ஹேண்ட்ஸ்ப்ரீ வசதி மூலமாக போன் அழைப்புகளை பெறுவதற்கான சுவிட்சுகளும் உள்ளன.

பிற மாருதிகளிலிருந்து வித்தியாசப்படும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர். ஆர்பிஎம் மீட்டர் மற்றும் ஸ்பீடோ மீட்டர் அனலாக் முறையிலும், ஓடோமீட்டர் மற்றும் ட்ரிப் மீட்டர், கதவு திறந்திருப்பது குறித்து எச்சரிக்கும் வசதிகளுக்கான திரையும் உள்ளன.

பாக்கெட்டில் சாவியை வைத்துக் கொண்டு புஷ் பட்டன் மூலமாக எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கான வசதியும் டாப் வேரியண்ட்டில் உண்டு.

சைடுமிரர் மற்றும் பவர் விண்டோ அட்ஜெஸ்ட் செய்வதற்கான சுவிட்சுகள்.

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலின் படம். கியர் லிவருக்கு முன்னால் சிறிய வாட்டர் பாட்டில் மற்றும் பொருட்களை வைப்பதற்கான இடவசதி. அதற்கு அடுத்தாக சென்டர் கன்சோலுக்கு கீழாக மொபைல்போன் வைப்பதற்கான இடவசதி உள்ளது.

மாருதி ஸ்விஃப்ட், டிசையர் உள்ளிட்ட கார்களில் இடம்பெற்றிருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலிலும் வருகிறது.

இந்த கார் இளைய சமுதாய வாடிக்கையாளர்களை குறிவைத்து களமிறக்கப்படுகிறது. அதற்கு ஏற்ப பல்வேறு கவர்ச்சிகர அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. அத்துடன் கூடுதல் ஆக்சஸெரீகளுடன் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும்.

இதன் கருப்பு வண்ண இன்டீரியர் மிகவும் பிரிமியமாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறது.

நேவிகேஷன் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை ஒருங்கே வழங்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்.

ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் அதன் கட்டுப்பாட்டு அமைப்பு சென்டர் கன்சோலில் கீழ் பகுதியில் இடம்பெற்று இருக்கிறது.

ரூ.4.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டாப் வேரியண்ட்டில் மிகவும் பிரிமியமான பல அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

மாருதி இக்னஸ் காரை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த படங்கள் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Friday, December 16, 2016, 14:07 [IST]
English summary
Maruti Ignis Photo Gallery.
Please Wait while comments are loading...

Latest Photos