மாருதி சூப்பர் கேர்ரி எல்சிவி இந்தியாவில் 2016-ல் அறிமுகம்

By Ravichandran

மாருதி நிறுவனம் உருவாக்கும் மாருதி சூப்பர் கேர்ரி எல்சிவி இந்தியாவில் இந்த ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதி சூப்பர் கேர்ரி எல்சிவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மாருதி சூப்பர் கேர்ரி எல்சிவி...

மாருதி சூப்பர் கேர்ரி எல்சிவி...

மாருதி சூப்பர் கேர்ரி எல்சிவி தான் மாருதி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள முதல் எல்சிவி ஆகும்.

எல்சிவி என்பது இலகுரக வணிக வாகனம் (லைட் கமர்ஷியல் வெஹிகிள் - Light Commercial vehicle (LCV)) என்பதை குறிக்கிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

மாருதி சூப்பர் கேர்ரி எல்சிவி, இந்தியாவில் நீண்ட காலமாகவே அறிமுகத்திற்கு காத்து கிடந்தது.

இடி ஆட்டோ இதழுக்கு அளித்த பேட்டியில், "மாருதி சூப்பர் கேர்ரி எல்சிவி, இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்" என மாருதியின் சேர்மேன் ஆர் சி பார்கவா தெரிவித்தார்.

தாமதத்திற்கான காரணம்;

தாமதத்திற்கான காரணம்;

மாருதி சூப்பர் கேர்ரி எல்சிவி, கடந்த சில ஆண்டுகளாகவே உருவாக்கம் நிலையில் இருந்து வருகிறது. இது முன்பே அறிமுகம் செய்திருக்கப்பட வேண்டும் என்ற நிலையில், மறு வடிவமைப்பு காரணமாக இதன் அறிமுகம் தாமதமாகி வந்தது.

மாருதி சூப்பர் கேர்ரி எல்சிவியை இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கும், இதன் சுமை தூக்கும் திறனை கூட்டுவதற்கும், இதை மறு வடிவமைப்பு செய்யும் பணியில், மாருதி நிறுவனம் ஈடுபட்டிருந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்தியாவிற்கான இஞ்ஜின்;

இந்தியாவிற்கான இஞ்ஜின்;

இந்தியாவிற்கான மாருதி சூப்பர் கேர்ரி எல்சிவிக்கு 800சிசி டீசல் இஞ்ஜின் பொருத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதே இஞ்ஜின் தான் செலெரியோவின் டீசல் வேரியன்ட் மாறும் சிஎன்ஜி வேரியன்ட்டிலும் உபயோகிக்கப்படுகிறது.

ஏற்றுமதிக்கான இஞ்ஜின்;

ஏற்றுமதிக்கான இஞ்ஜின்;

ஏற்றுமதிக்கான மாருதி சூப்பர் கேர்ரி எல்சிவிக்கு, 1.2 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.

மாருதி சூப்பர் கேர்ரி எல்சிவியின் ஏற்றுமதி ஏற்கனவே துவங்கிவிட்டது.

போட்டி;

போட்டி;

மாருதி சூப்பர் கேர்ரி எல்சிவி, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது, இது டாடா ஏஸ் மற்றும் மஹிந்திரா மேக்ஸிமோ பிளஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

திறன்;

திறன்;

மாருதி சூப்பர் கேர்ரி எல்சிவி, 1 டன் என்ற அளவிலான சுமை இழுக்கும் திறன் (பே லோட்) கொண்டதாக இருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் அசோக் லேலண்ட் சன்ஷைன் பஸ் இந்தியாவில் அறிமுகம்

மஹிந்திரா சுப்ரோ 8 சீட்டர் மினி வேன் மற்றும் மினி டிரக் அறிமுகம்!

மாருதி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

மாருதி சூப்பர் கேர்ரி எல்சிவி - கூடுதல் படங்கள்

மாருதி சூப்பர் கேர்ரி எல்சிவி - கூடுதல் படங்கள்

மாருதி சூப்பர் கேர்ரி எல்சிவி - கூடுதல் படங்கள்

Most Read Articles
English summary
Maruti Super Carry LCV Launch is confirmed for this year by Maruti's Chairman, R C Bhargava in an Interview to ET Auto. Maruti was expected to launch their Super Carry Light Commercial vehicle (LCV) in India earlier itself. But had to be delayed due to re-engineering work. Maruti Super Carry LCV will have payload capacity of 1-ton. To know more, check here...
Story first published: Monday, July 25, 2016, 19:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X