மாருதி கார்களுக்கான சிறப்பு சேமிப்புச் சலுகைகள் விபரம்!

மாருதி கார்கள் மீது சிறப்பு சேமிப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

'செல்லாது' அறிவிப்பால் கார் விற்பனையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் சிறப்பு சேமிப்புச் சலுகைகளை மாருதி கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் பட்ஜெட் கார் மாடல்களுக்கு இப்போது அதிகபட்ச சேமிப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி ஆல்ட்டோ 800

மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு ரூ.60,000 மதிப்புடைய சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது. ரூ.30,000 வரை விலையில் நேரடி தள்ளுபடியாகவும், ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெறும் வாய்ப்புள்ளது. அரசு ஊழியர்கள் கூடுதலாக ரூ.5,000 தள்ளுபடியை பெறலாம்.

மாருதி ஆல்ட்டோ கே10

மாருதி ஆல்ட்டோ கே10 காருக்கு ரூ.55,000 வரை சேமிப்பை பெறும் வாய்ப்புள்ளது. விலையில் ரூ.25,000 வரையிலும், எக்ஸ்சேஞ்ச் போனசாக ரூ.25,000 வரையிலும் பெற முடியும். அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ரூ.5,000 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆல்ட்டோ கே10 காரின் ஏஎம்டி மாடலுக்கு கூடுதலாக ரூ.5,000 தள்ளுபடியும் உண்டு.

மாருதி செலிரியோ

மாருதி செலிரியோ காருக்கு ரூ.50,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது. பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.25,000 வரை கூடுதல் மதிப்பாக பெற முடியும். விலையில் ரூ.20,000 வரை தள்ளுபடியும் உள்ளது. ஏஎம்டி மாடலுக்கு ரூ.5,000 தள்ளுபடி கூடுதலாக வழங்கப்படுகிறது.

மாருதி வேகன் ஆர்

மாருதி வேகன் ஆர் காரின் விலையில் ரூ.30,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பழைய காரை மாற்றுவோருக்கு ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனசாக வழங்கப்படுகிறது. ஏஎம்டி மாடலுக்கு கூடுதலாக ரூ.5,000 தள்ளுபடியாக பெற முடியும்.

எளிய நடைமுறை

கிரெட்டி கார்டு, டெபிட் கார்டு மற்றும் ஆன்லைன் வங்கி சேவைகள் மூலமாகவும் கார்களை பயன்படுத்தி கார் வாங்குவதற்கான வசதிகளையும் மாருதி வழங்குகிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Maruti Suzuki is offering discount and exchange bonus for its entry level models.
Please Wait while comments are loading...

Latest Photos