மாருதி இக்னிஸ் அறிமுக தேதி விபரம் வெளியானது!

Written By:

மாருதி நிறுவனத்திடமிருந்து அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புத்தம் புதிய கார் மாடல் இக்னிஸ். மினி க்ராஸ்ஓவர் மாடலாக வரும் இந்த கார் மீது எஸ்யூவி வகை கார் பிரியர்கள் அதிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இந்த காரின் அறிமுக தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அறிமுக தேதி உள்ளிட்ட பல முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் மாருதி நெக்ஸா இணையதளத்தில் இந்த கார் இடம்பெற்றது. மேலும், 'விரைவில் வருகிறது' என்ற வாசகத்துடன் டீசரும் வெளியிடப்பட்டது. மாருதியின் நெக்ஸா பிரிமியம் ஷோரூம் வழியாக விற்பனைக்கு வரும் மூன்றாவது கார் மாடல் இக்னிஸ்.

சமீபத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்ட மாருதி ரிட்ஸ் கார் இடத்தை இந்த புதிய க்ராஸ்ஓவர் வகை கார் மாடல் நிரப்பும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வடிவமைப்பு, வசதிகளில் இளைய சமுதாயத்தினரை வெகுவாக கவரும் அம்சங்களை பெற்றிருக்கிறது.

மாருதி ஸ்விஃப்ட் காரில் இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் இந்த காரிலும் இடம்பெற்றிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேரை சப்போர்ட் செய்யும் நவீன இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவை இந்த காரின் மிக முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்று இருக்கும்.

தீபாவளி பண்டிகையின்போதே விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் பலேனோ கார்களுக்கு இருக்கும் அதிக டிமான்ட் காரணமாக, உற்பத்தி செய்வதில் சிக்கல் எழுந்தது.

அதனால், இந்த காரின் அறிமுகம் தள்ளிப்போடப்பட்டது. இந்த நிலையில், ஜனவரி 13ந் தேதி இந்த புதிய மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.4.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா கேயூவி100 காருக்கு நேர் போட்டியாக இருக்கும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Maruti Suzuki Ignis will be launched in India on 13th January, 2017.
Please Wait while comments are loading...

Latest Photos