மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய கஸ்டமைஸ் வசதி அறிமுகம்!

Written By:

மாருதி பிரெஸ்ஸா காரின் அழகையும், வசதிகளையும் கூட்டிக் கொள்வதற்கான புதிய கஸ்டமைஸ் வசதியை மாருதி கார் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

ஐ- கிரியேட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய வசதி, வாடிக்கையாளர்களை மேலும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஸ்ஸா காருக்கான இந்த புதிய கஸ்டமைஸ் வசதி குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்,

காரை கஸ்டமைஸ் செய்து டெலிவிரி பெறுவதற்கான வாய்ப்பாக இது அமைந்துள்ளது. ஆம், முன்பதிவு செய்யும்போது விருப்பமான பேக்கேஜை சொல்லிவிட்டால் போதுமானது. அதாவது, சொகுசு கார் நிறுவனங்களை போன்று விருப்பத்திற்கு ஏற்ப பிரெஸ்ஸாவை கஸ்டமைஸ் செய்து டெலிவிரி பெறும் வாய்ப்பு கிட்டும்.

ஸ்போர்ட்ஸ் ஆக்சிலரேட் பேக்கேஜ், கிளாமர் எலிகன்ஸ் பேக்கேஜ், கிளாமர் கிளிட்ஸ் பேக்கேஜ், கிளாமர் விலாசிட்டி பேக்கேஜ், கிளாமர் டைனமிக் பேக்கேஜ் என விதவிதமான கஸ்டமைஸ் ஆப்ஷன்களை உங்கள் விருப்பத்திற்கும், ரசனைக்கும் ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளலாம்.

பேக்கேஜ் தவிர்த்து, விருப்பப்பட்ட ஆக்சஸெரீகளை மட்டும் தேர்வு செய்து பொருத்திக் கொள்வதற்கான சிறப்பு கஸ்டமைஸ் திட்டமும் உண்டு. இதற்கான விரிவான கையேடுகள் டீலரில் வைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த புதிய கஸ்டமைஸ் வசதி மூலமாக கிட்டத்தட்ட 90 விதமான பிரத்யேக ஆக்சஸெரீகளுடன் உங்களது பிரெஸ்ஸாவை அலங்கரித்துக் கொள்ளும் வாய்ப்பை மாருதி வழங்குகிறது.

காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்திற்கான கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் காரின் வண்ணத்திற்கு ஒத்துப்போகும் அலங்கார விஷயங்களுடன் கஸ்டமைஸ் செய்து பெற முடியும்.

காரின் அடக்க விலையைவிட கூடுதல் தொகை கொடுத்து இதுபோன்று சுய விருப்பத்தின் பேரில் காரை அலங்காரம் செய்ய வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். இதுபோன்ற விஷயங்களுக்காக மாருதி பிரெஸ்ஸா வாடிக்கையாளர்கள் சராசரியாக ரூ.24,000 வரை செலவு செய்கின்றனர் என்று மாருதி தெரிவித்துள்ளது.

தற்போது பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு மட்டும் இந்த ஐ- கிரியேட் கஸ்டமைஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இதர கார் மாடல்களுக்கும் இந்த ஐ- கிரியேட் கஸ்டமைஸ் வசதியை அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டு உள்ளது.

இது ஒரு புரட்சிகர திட்டம் என்று மாருதி கார் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஆர்எஸ். கல்சி தெரிவித்தார். இதுபோன்ற திட்டம் முதல்முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Maruti Suzuki Launches iCreate Customisation Feature. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos