மாருதி ரிட்ஸ் காரின் உற்பத்தி நிறுத்தம்... விரைவில் புதிய மாடல் அறிமுகமாகிறது!

Written By:

கடந்த 2009ம் ஆண்டு மாருதி ரிட்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் கார் வாங்க விரும்புவோரின் தேர்வு பட்டியலில் இந்த கார் முக்கிய இடத்தை பிடித்தது.

செயல்திறன் மிக்க எஞ்சின், அதிக மைலேஜ், குறைவான விலை போன்றவை இந்த காருக்கான மார்க்கெட்டை விரிவுப்படுத்தியது. இந்த நிலையில், சந்தைப்போட்டி தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இந்த காரின் மீது அதிக கவனம் செலுத்தவில்லை மாருதி.

சரிந்த விற்பனை

மேலும், இதன் வடிவமைப்பும் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் கவரவில்லை. குறிப்பாக, மாருதி ரிட்ஸ் காரின் பின்புற டிசைன் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால், ரிட்ஸ் காரின் விற்பனை தொடர்ந்து சரியத் துவங்கியது.

முன்பதிவு குறைந்தது

இந்த நிலையில், கடந்த ஆண்டு முதலே மாருதி ரிட்ஸ் காரின் உற்பத்தி நிறுத்தப்படுவதாக மீடியாக்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்ததால், வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்வதை குறைத்தனர். இதனால், மாதத்திற்கு 2,500 முதல் 3,000 கார்கள் என்ற கணக்கில் குறைந்தது.

முதல் கண்டம்

கடந்த பிப்ரவரி மாதத்துடன் இந்த காருக்கு விடை கொடுக்க மாருதி முடிவு செய்திருந்தது. ஆனால், மாற்றாக புதிய காரை களமிறக்கிய பிறகு இந்த காருக்கு கும்பிடு போடுவதே சிறந்தது என மாருதி திட்டமிட்டது.

உற்பத்தி நிறுத்தம்

அதன்படி, புதிய கார் தயாராகிவிட்ட நிலையில், தற்போது ரிட்ஸ் கார் உற்பத்தியை மாருதி நிறுத்திவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு மாதங்களாக ஒரு ரிட்ஸ் கார் கூட உற்பத்தி செய்யப்படவில்லை.

விற்பனை எண்ணிக்கை

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3,038 ரிட்ஸ் கார்களும், செப்டம்பரில் 2,515 ரிட்ஸ் கார்களும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் வெறும் 5 ரிட்ஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. இதனால், டீலரில் இருந்த அனைத்து ரிட்ஸ் கார்களும் விற்று தீர்ந்து விட்டதாக தெரிகிறது.

புதிய கார் மாடல்

இந்த நிலையில், பாப்புலராக விளங்கிய மாருதி ரிட்ஸ் காருக்கு பதிலாக விரைவில் மாருதி இக்னிஸ் கார் மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது. இந்த கார் கிராஸ்ஓவர் ரக மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

அதிக எதிர்பார்ப்பு

மேலும், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வருவதும், வாடிக்கையாளர்களை கவரும் விலையிலும் வர இருப்பதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய மாருதி இக்னிஸ் கார் நெக்ஸா பிரிமியம் ஷோரூம்கள் வழியாக விற்பனை செய்யப்படும்.

English summary
Maruti Ritz Hatchback Production Stopped In India.
Please Wait while comments are loading...

Latest Photos