மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கான கூடுதல் ஆக்சஸெரீகளும், அதன் விலை விபரமும்!

Written By:

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து சிறப்பான விற்பனையை செய்து இந்தியாவின் வெற்றிகரமான கார்களின் பட்டியலில் இணைந்துள்ளது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா. இதுவரை 50,000க்கும் அதிகமான பிரெஸ்ஸா எஸ்யூவிகள் டெலிவிரி கொடுக்கப்பட்டு விட்டன.

மறுபுறம் பிரெஸ்ஸாவுக்கான முன்பதிவு தொடர்ந்து சிறப்பாக இருந்து வருவதால், காத்திருப்பு காலமும் அதிகமாக இருக்கிறது. சில வேரியண்ட்டுகளுக்கு 7 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறதாம். இருப்பினும், பிரெஸ்ஸாதான் தங்களுக்க அனைத்து விதத்திலும் சரியான தேர்வு என முன்பதிவு செய்து பல்லாயிரணக்கணக்கான வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியின் மதிப்பையும், வசதிகளையும் கூட்டிக் கொள்வதற்காக பல கூடுதல் ஆக்சஸெரீகள் விற்பனை செய்யப்படுகிறது. அந்த ஆக்சஸெரீகள் விபரங்களையும், அதன் விலை விபரத்தையும் இந்த செய்தியில் காணலாம்.

மாருதி பிரெஸ்ஸாவின் வெளிப்புறத்திற்கான விசேஷ ஆக்சஸெரீகள் விபரங்கள் மேலே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. விசேஷ பாடி கிட், அலாய் வீல்கள் உள்ளிட்டவற்றின் விபரங்கள் மற்றும் அதன் விலை விபரங்களை காணலாம்.

பாடி கவர், வெளிப்புறத்திற்கான க்ரோம் பூச்சுடன் கூடிய அலங்கார ஆக்சஸெரீகள் உள்ளிட்டவற்றின் விலை விபரங்களை மேலே உள்ள படத்தில் காணலாம்.

காருக்கான இன்டீரியர் சம்பந்தப்பட்ட கூடுதல் ஆக்சஸெரீகள், வீல் கவர் உள்ளிட்டவற்றின் விலை விபரங்களை மேலே உள்ள பட்டியலில் காணலாம்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் வெற்றிக்கு அதன் நம்பகமான டீசல் எஞ்சின் மிக முக்கிய காரணம். இதில், இருக்கும் 1.3 லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 88.5 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. இந்த கார் லிட்டருக்கு 24.3 கிமீ மைலேஜ் தரும் என்பதும் வாடிக்கையாளர்களை கவர காரணம்.

சென்னையில் எல்டிஐ பேஸ் மாடல் ரூ.8.24 லட்சம் முதல் இசட்டிஐ ப்ளஸ் மாடல் ரூ.10.98 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

English summary
Maruti Vitara Brezza Extra Accessories Price List. Read the details in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos