அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் ஸ்பை படங்கள் வெளியாகியது

By Ravichandran

அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் சொகுசு காரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மெர்சிடிஸ் திட்டங்கள்;

மெர்சிடிஸ் திட்டங்கள்;

ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், அடுத்த தலைமுறை கார்களை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இதற்காக தொடர்ந்து புதிய கார்கள் உருவாக்கத்திலும், அவற்றை சோதனை செய்வதிலும் ஈடுபட்டுள்ளது.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

ஒரு சில தினங்களுக்கு முன்பு தான், அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் ஜிஎல்இ சொகுசு கார் செய்யப்பட போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் வெளியாகியது.

இதற்கிடையில், வெளியாக கூடிய மெர்சிடிஸ் ஏ கிளாஸ் கார், முதல் முறையாக சோதனை செய்யபட்ட போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் வெளியாகியது.

ஈர்க்கும் விஷயம்;

ஈர்க்கும் விஷயம்;

கடுமையாக உருமறைப்புடன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டும், இதன் சில விவரங்கள் கவனிக்கும் விதமாக அமைந்தது.

நிகழ் தலைமுறை மெர்சிடிஸ் ஏ கிளாஸ் காரை காட்டிலும், அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் ஏ கிளாஸ் காரின் ரூஃப்லைன் சரிவாக காணப்படுகிறது.

புதிய மெர்சிடிஸ் ஏ கிளாஸ், கனமான சி-பில்லர் கொண்டுள்ளது.

தோற்றம்;

தோற்றம்;

அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் ஏ கிளாஸ், சற்று கூடுதல் கூர்மையாக காட்சி அளிக்கிறது.

இதன் மூலம், மெர்சிடிஸ் நிறுவனம், நிகழ் தலைமுறை மெர்சிடிஸ் ஏ கிளாஸ் வட்டத்தன்மை மிகுந்த டிசைனை விலக்கி கொள்கிறது என தெரிந்து கொள்ளலாம்.

பிளாட்ஃபாரம்;

பிளாட்ஃபாரம்;

நிகழ் தலைமுறை மெர்சிடிஸ் ஏ கிளாஸ், பி கிளாஸ், ஜிஎல்ஏ, சிஎல்ஏ மற்றும் சிஎல்ஏ ஷூட்டிங் பிரேக் ஆகியவை எம்எஃப்ஏ பிளாட்ஃபாரமை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், புதிய மெர்சிடிஸ் ஏ கிளாஸ், முற்றிலும் புதிய பிளாட்ஃபாரம் அடிப்படையில் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய தலைமுறை மெர்சிடிஸ் ஏ கிளாஸ், வழக்கமாக உபயோக்கிக்கபடும் டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜின்கள் கொண்டிருக்கலாம்.

இந்த இஞ்ஜின்கள், தேர்வு முறையிலான மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களுடன் இணைக்கப்படலாம்.

திறன்;

திறன்;

உயர் தரமான விவரக்குறிப்புகள் கொண்ட டாப் என்ட் வேரியன்ட்டான புதிய டர்போ சார்ஜ்ட் இஞ்ஜின், 400 ஹெச்பிக்கும் கூடுதலான திறனை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் ஏ கிளாஸ், 2017 ஃபிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனைக்கு அறிமுகம்;

விற்பனைக்கு அறிமுகம்;

அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் ஏ கிளாஸ், ஐரோப்பாவில் 2018-ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

இதையடுத்து, விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியது

மெர்சிடிஸ் தொடர்புடைய செய்திகள்

ஸ்பை படங்கள் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Spy Pics of Next-Gen Mercedes A-Class spotted for first time is released now. German carmaker Mercedes Benz made next gen GLE Spy Pics was released just few days ago. Now, Spy Pics of next generation A-Class is released. Next-Gen Mercedes A-Class has roofline which seems to slope even more, than on current car and has thicker C-Pillar. To know more, check here...
Story first published: Saturday, June 18, 2016, 19:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X