புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி சி43 கார் இந்தியாவில் அறிமுகம் - விபரம்!

Written By:

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏஎம்ஜி பிராண்டில் தனது அதிசெயல்திறன் மிக்க கார்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், இன்று ஒரு புதிய மாடலை இந்திய மண்ணில் களமிறக்க உள்ளது.

நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் கார் பந்தய களத்தில் நடந்த நிகழ்ச்சியில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி சி43 4 மேட்டிக் என்ற அந்த புதிய கார் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரின் ஏஎம்ஜி வெர்ஷனாக வந்துள்ளது. மேலும், ஏஎம்ஜி பிராண்டில் விற்பனை செய்யப்படும் ஏஎம்ஜி சி200 மற்றும் ஏஎம்ஜி சி63 கார்களுக்கு இடையிலான விலையில் இந்த புதிய கார் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. வழக்கம்போல் இந்த காரிலும் ஏஎம்ஜி பிராண்டு ஆக்சஸெரீகள் மற்றும் தொழில்நுட்ப விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

முன்புறத்தில் மறுவடிவமைப்பு பெற்ற க்ரில் அமைப்பு, வலிமையான பம்பர், 18 அங்குல சக்கரங்கள் ஆகியவை சாதாரண மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரிலிருந்து இதனை வெகுவாக வேறுபடுத்துகிறது.

பின்புறத்திலும் கம்பீரத்தை தரும் புதிய பம்பர், அதற்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கம் டிபியூசர் மற்றும் நான்கு புகைப் போக்கி குழாய்கள் கொண்ட சைலென்சர் அமைப்பு, பூட் ரூம் மூடியில் இருக்கும் மெல்லிய ஸ்பாய்லர் ஆகியவை குறிப்பிடத்தக்க விஷயங்கள்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி சி43 காரின் மிகவும் கவர்ச்சியாகவும், வசீகரம் மிகுந்ததாகவும் இருக்கிறது. ஏஎம்டி பிராண்டின் முத்திரை பதித்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அலுமினிய வேலைப்பாடு அலங்காரம் போன்றவை சிறப்பு சேர்க்கின்றன.

இந்த காரில் இருக்கும் 3.0 லிட்டர் இரட்டை டர்போசார்ஜர்கள் கொண்ட வி6 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 362 பிஎச்பி பவரையும், 520 என்எம் டார்க்கையும் வழங்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 4 மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது.

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.7 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. இந்த காரில் மற்றுமொரு முக்கிய விசேஷ தொழில்நுட்பம் உள்ளது.

ஏஎம்ஜி ரைடு கன்ட்ரோல் சஸ்பென்ஷன் சிஸ்டம் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சஸ்பென்ஷன் எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தப்படும். அதாவது, சாலையின் நிலை மற்றும் வேகத்துக்கு தக்கவாறு மூன்று விதமான உயரங்களில் சஸ்பென்ஷனின் டேம்பர் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி சி43 கார் ரூ.74.35 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது இந்த ஆண்டில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் 13வது கார் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
German carmaker Mercedes-Benz has launched the Mercedes-AMG C43 4-Matic performance sedan in India.
Please Wait while comments are loading...

Latest Photos