மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோ மாடல் இந்தியாவில் அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரின் கேப்ரியோ மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Written By:

சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்தில் தொடர்ந்து புதிய மாடல்களை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரின் கேப்ரியோ மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோ சி300 என்ற மாடல் பெயரில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரின் டிசைனுக்கும் இந்த காரின் டிசைனுக்கும் மாற்றங்கள் இல்லை. ஆனால், புதிய ஃபேப்ரிக் திறந்து மூடும் கூரையுடன் வந்துள்ளது. கருப்பு, பழுப்பு, சிவப்பு மற்றும் நீலம் ஆகிய நிறங்களில் இந்த கூரையை தேர்வு செய்யலாம்.

புதிய சி க்ளாஸ் கேப்ரியோ மாடலில் கருப்பு வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு வலு சேர்க்கும் விதத்தில் லெதர் இருக்கைகள், தையல் வேலைப்பாடுகள் கவர்கிறது. டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 13 ஸ்பீக்கர்களுடன் கூடிய பர்மிஸ்டர் மியூசிக் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்கள்.

ஓட்டுனரை சேர்த்து 4 பேருக்கான இருக்கை வசதி உள்ளது. கூரையை திறந்து வைத்து பயணிக்கும்போது காற்று வேகம் முகத்தில் அறைவதை தவிர்க்கும் வகையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏர்கேப் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக, விண்ட் ஸ்கிரீன் மூலமாக காற்றால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோ காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 241 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க்கையும் வழங்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக எஞ்சின் ஆற்றல் பின்சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது.

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 6.4 வினாடிகளில் தொட்டுவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. Eco, Comfort, Sport, Sport plus மற்றும் Individual ஆகிய 5 விமான டிரைவிங் மோடுகள் உள்ளன.

இந்த காரில் பயணிகள் பாதுகாப்புக்காக பல வசதிகள் உள்ளன. ஏர்பேக்குகள், சாலை நிலைகளுக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ளும் சஸ்பென்ஷன் அமைப்பு, பார்க்கிங் அசிஸ்ட் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

 

கருப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் நீலம் ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கிறது. ரூ.60 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Mercedes has launched the drop-top C-Class convertible in India.
Please Wait while comments are loading...

Latest Photos