மேம்படுத்தப்பட்ட புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ கார் இந்தியாவில் அறிமுகம்!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

சொகுசு கார் மார்க்கெட்டில் குறைவான விலை கொண்ட கவர்ச்சிகரமான மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ செடான் கார். இந்த நிலையில், சந்தைப் போட்டி கடுமையாக இருப்பதையொட்டி, வடிவமைப்பு, வசதிகளில் மேம்படுத்தப்பட்ட புதிய சிஎல்ஏ கார் இந்தியாவில் இன்று களமிறக்கி உள்ளது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்.

இந்த புதிய காரில் இடம்பெற்று இருக்கும் மாற்றங்கள், கூடுதல் வசதிகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிசைன் மாற்றங்கள்

முன்புறத்தில் ஹெட்லைட் சிறிய வடிவமைப்பு மாற்றங்கள் கண்டிருப்பதோடு, ஆப்ஷனலாக எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகளை பெற்றிருக்கிறது. அதேபோன்று, புதிய அலாய் வீல்கள், புதிய பம்பர் வடிவமைப்பு, எல்இடி டெயில் லைட்டுகளும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

உட்புற மாற்றங்கள்

உட்புரத்தில் புதிய சிஎல்ஏ காரில் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு, 8 இன்ச் தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இருக்கைகளின் வடிவமும் மேம்படுத்தப்பட்டு இருப்பதுடன், உட்புறமும் புதுப்பொலிவு மிகுதியாக புதுப்பொலிவு பெற்றிருக்கிறது.

புதிய வசதிகள்

ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிகளை இது பெற்றிருக்கிறது. கார்மின் மேப் பைலட் ஜிபிஎஸ் சிஸ்டம் வசதி உள்ளது. முன் இருக்கைகளை வசதிக்கு ஏற்றவாறு அமைப்பை மாற்றி பதிவு செய்து கொண்டு பயன்படுத்தும் வசதியும் உண்டு.

எஞ்சின் ஆப்ஷன்

புதிய சிஎல்ஏ கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வந்துள்ளது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 181 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் வழங்கும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. பெட்ரோல் மாடல் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 7.1 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 240 கிமீ வேகம் வரை செல்லும்.

டீசல் மாடல்

டீசல் மாடலில் இருக்கும் 2.1 லிட்டர் எஞ்சின் 134 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் வழங்கும். இதிலும் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்தான் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 9 வினாடிகளில் எட்டும். மணிக்கு 220 கிமீ வேகம் வரை செல்லும். Eco, Comfort, Sport மற்றும் Individual என 4 டிரைவிங் மோடுகளை கொண்டுள்ளது.

விலை விபரம்

இந்த கார் ஒரு பெட்ரோல் மாடலிலும், இரண்டு டீசல் மாடல்களிலும் விற்பனைக்கு கிடைக்கும். சிஎல்ஏ 200 ஸ்போர்ட் என்ற பெட்ரோல் மாடல் ரூ.33.68 லட்சத்திலும், சிஎல்ஏ 200டீ ஸ்டைல் மாடல் ரூ.31.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், சிஎல்ஏ 200டீ ஸ்போர்ட் மாடல் ரூ.34.68 லட்சத்திலும் கிடைக்கும். அனைத்தும் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The facelifted Mercedes Benz CLA features a tweaked design along with new features on the inside.
Please Wait while comments are loading...

Latest Photos