மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஆக்டிவிட்டி எடிஷன் இந்தியாவில் நாளை அறிமுகம்

By Ravichandran

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் ஜிஎல்ஏ 220டி ஆக்டிவிட்டி எடிஷன் இந்தியாவில் அக்டோபர் 13-ஆம் தேதி (நாளை) அறிமுகம் செய்யப்படும். இந்த தசரா மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றனர். இந்நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் தங்களின் புதிய ஜிஎல்ஏ ஆக்டிவிட்டி எடிஷன் மாடலை அறிமுகம் செய்கின்றனர்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஆக்டிவிட்டி எடிஷன் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

ஜிஎல்ஏ 220டி ஆக்டிவிட்டி...

ஜிஎல்ஏ 220டி ஆக்டிவிட்டி...

ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த ஜிஎல்ஏ 220டி ஆக்டிவிட்டி எடிஷன், லிமிட்டெட் எடிஷன் மாடல் அல்ல. இது, ஆரம்பக்கட்டத்தில் ஜிஎல்ஏ மாடலின் 4மேட்டிக் வேரியன்ட்டாக விளங்கும்.

புதிய அம்சங்கள்;

புதிய அம்சங்கள்;

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ 220டி ஆக்டிவிட்டி எடிஷன் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள் வழங்கப்படுகிறது. வரும் காலங்களில், இதில் உள்ள அம்சங்கள், பிற ட்ரிம்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ 220டி ஆக்டிவிட்டி எடிஷன் மாடலில், எலக்ட்ரானிக் பவர் அடிப்படையில் இயங்கும் டெயில்கேட், உயர்த்தப்பட்ட சஸ்பென்ஷன், புதிய அல்லாய் வீல்கள், ஆக்டிவிட்டி பேட்ஜ், ஆஃப் ரோட் பேக்கேஜ் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் ஸ்டார்ட்/ஸ்டாப் புஷ் பட்டன், பூட்டில் 12வி பவர் சாக்கெட், புதிய கமேன்ட் (COMAND) ஸ்கிரீன் மற்றும் மெர்சிடிஸ் நிறுவனத்தின் டைனமிக் செலக்ட் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ 220டி ஆக்டிவிட்டி எடிஷன் மாடலில், 2.1 லிட்டர் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த இஞ்ஜின், 167.68 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ 220டி ஆக்டிவிட்டி எடிஷன் மாடலின் இஞ்ஜின், 7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

முக்கிய வித்தியாசம்;

முக்கிய வித்தியாசம்;

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ 220டி ஆக்டிவிட்டி எடிஷன், ஸ்டாண்டர்ட் மாடலை காட்டிலும், இயக்குவதற்கு கூடுதல் திறன்மிக்கதாகவும், இனிமையாகவும் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

புக்கிங்;

புக்கிங்;

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ 220டி ஆக்டிவிட்டி எடிஷன் புக்கிங் துவங்கி ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.

விலை;

விலை;

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ 220டி ஆக்டிவிட்டி எடிஷன், 40 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான எக்ஸ்-ஷோரூம் விலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் - 8... யுத்தத்துக்கு வகை வகையாக தயாராகும் வாகனங்கள்...!!

2 டன் வால்வோ காருக்கும் அசங்காத கண்ணாடி பாலம்... !!

புல்லட் ரயிலில் பயணித்து ஆய்வு செய்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

Most Read Articles
English summary
Mercedes-Benz India will launch GLA 220d Activity Edition on October 13th, 2016. Bookings for this Activity Edition by German-based luxury car maker has begun. GLA Activity Edition is not limited edition by Mercedes-Benz India. This Activity Edition initially will be their 4MATIC variant of GLA. GLA Activity Edition will be more powerful and fun to drive. To know more, check here...
Story first published: Wednesday, October 12, 2016, 12:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X