மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ 4மேட்டிக் ஆக்டிவிட்டி எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

Written By:

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தங்களின் புதிய ஜிஎல்ஏ 4மேட்டிக் ஆக்டிவிட்டி எடிஷன் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் தசரா மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகை காலங்கள் வெகு கோலாகலாமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி. பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக அறிமுகம் செய்யபட்டுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ 4மேட்டிக் ஆக்டிவிட்டி எடிஷன் எஸ்யூவி தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

ஜிஎல்ஏ 4மேட்டிக் ஆக்டிவிட்டி...

ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய ஜிஎல்ஏ 220டி 4மேட்டிக் ஆக்டிவிட்டி அல்லது ஜிஎல்ஏ 4மேட்டிக் ஆக்டிவிட்டி எடிஷன் எஸ்யூவி என்று அழைக்கப்படும் இந்த மாடல் தான், ஜிஎல்ஏ இந்தியா, ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வெளியிடும் முதல் மாடல் ஆகும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ 4மேட்டிக் ஆக்டிவிட்டி எடிஷன், மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் மூலம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட 9-வது மாடல் ஆகும். தற்போது வரை மெர்சிடிஸ் நிறுவனம், ஜிஎல்ஏ மாடலில் 3,500 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

எதிர்பார்ப்பு;

இந்த புதிய வேரியன்ட், அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை ஜிஎல்ஏ மாடலை வாங்க தூண்டும் என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் எதிர்பார்க்கிறது.

இஞ்ஜின்;

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ 4மேட்டிக் ஆக்டிவிட்டி எடிஷன் எஸ்யூவியில், 2.1 லிட்டர் டர்போசார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின், 167.68 பிஹெச்பியையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ 4மேட்டிக் ஆக்டிவிட்டி எடிஷன் எஸ்யூவியின் இஞ்ஜின், 7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டிருக்கும் வகையிலான ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டுள்ளது.

செயல்திறன்;

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ 4மேட்டிக் ஆக்டிவிட்டி எடிஷன், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 7.7 நொடிகளில் எட்டி விடுகிறது.

சிறப்பு அம்சங்கள்;

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ 4மேட்டிக் ஆக்டிவிட்டி எடிஷன் எஸ்யூவி, 18-இஞ்ச் அல்லாய் வீல்கள், பிளாக் டீகேல்கள், ராக்கர் பேனலில் குரோம் பூச்சு, ஆக்டிவிட்டி எடிஷன் பேட்ஜ்கள் மற்றும் ஆஃப்-ரோட் பேக்கேஜ் உடன் கூடிய உயர்த்தப்பட்ட சஸ்பென்ஷன் ஆகிய சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளது.

பொழுதுபோக்கு;

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ 4மேட்டிக் ஆக்டிவிட்டி எடிஷன் எஸ்யூவியில் 8-இஞ்ச் எண்டர்டெயின்மென்ட் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது.

விலை;

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ 4மேட்டிக் ஆக்டிவிட்டி எடிஷன் எஸ்யூவி, 38.51 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் பூனே) விலையில் விற்கப்படுகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Tuesday, October 18, 2016, 11:13 [IST]
English summary
Mercedes-Benz India has launched special model for customers during 2016 festive season called all-new GLA 220d 4MATIC Activity Edition. Activity Edition is the first model within GLA India range to be equipped with all-wheel drive. GLA 4MATIC Activity Edition is Mercedes-Benz India's ninth product launch in India. It is priced at Rs. 38.51 lakh ex-showroom (Pune). To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos