குண்டு துளைக்காத மெர்சிடிஸ் மேபக் எஸ்600 கார்டு இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

குண்டுகள் துளைக்காத பாதுகாப்பு கவச வசதிகளுடன் மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 கார்ட் சொகுசு கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

உலகின் முதல் கார்;

உலகின் முதல் கார்;

மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 கார்ட் சொகுசு கார் தான், பயணியர் ரக வாகனங்களில் உலக அளவில் முதல் முறையாக விஆர்10 என்ற பாதுகாப்பு தர ரேட்டிங் பெற்ற வாகனமாக விளங்குகிறது.

மேலும், ஈஆர்சி 2010 அல்லது எக்ஸ்ப்ளோஷன் ரெசிஸ்டண்ட் வெஹிகிள் (குண்டு வெடிப்பு தடுப்பாற்றலுடைய வாகனம்) குண்டு வெடிப்பு பாதுகாப்புக்கான சான்றிதழ் பெற்றுள்ளது.

கவசமாக விளங்கும் கார்;

கவசமாக விளங்கும் கார்;

மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 கார்ட் சொகுசு கார் பெற்றுள்ள சான்றிதழ்கள் படி, இதன் வெளிப்புற பேனல்கள் மற்றும் ஜன்னல்கள், துப்பாக்கி குண்டுகள், ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள், ஸ்னைப்பர் துப்பாக்கிகள் ஆக்கியவற்றில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது.

மேலும், இந்த சொகுசு கார் மூலம், வெடிபொருட்கள் ஆர்பிஜி அல்லது ராக்கெட் ப்ரொபெல்ட் க்ரினேட்கள் (ராக்கெட்டால் செலுத்தபடும் க்ரினேட்கள் ஆகியவற்றில் இருந்தும் பாதுகாப்பு பெறலாம்.

பாடிஒர்க்;

பாடிஒர்க்;

மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 கார்ட் சொகுசு காரின் பாடிஒர்க் எனப்படும் கூடு, பிரத்யேக வகையிலான ஸ்டீல் கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது. இந்த ஸ்டீல் ஆனது,இந்த காரின் வெளிப்புற தோல் பகுதிக்கும், ஃபிரேம் ஆகிய இரண்டிற்கும் இடையில் வைத்து கட்டமைக்கபட்டுள்ளது.

இந்த பிரத்யேகமான ஸ்டீல் அமைப்பு, காரின் உள்ளே அமர்ந்திருக்கும் பயணியர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது.

பிரத்யேகமான கோட்டிங்;

பிரத்யேகமான கோட்டிங்;

மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 கார்ட் சொகுசு காரின் ஜன்னல்களுக்கு ஸ்பெஷலான பாலிகார்பனேட் கோட்டிங் வழங்கபட்டுள்ளது.

ஒரு வேளை, காரின் மீது நடத்தபடும் தாக்குதல்கள் நேரடியாக கண்ணாடிகள் மீது நடத்தபட நேரிட்டால், ஸ்பெஷலான பாலிகார்பனேட் கோட்டிங் ஆனது

ஸ்ப்ளிண்டர்கள் (துண்டுகள்) பரந்து செல்வதில் இருந்து தடுக்கிறது.

டயர்களின் சிறப்புகள்;

டயர்களின் சிறப்புகள்;

மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 கார்ட் சொகுசு காருக்கு மிஷ்லின் டயர்கள் பொருத்தபட்டுள்ளது. இந்த மிஷ்லின் டயர்களுக்கு ஸ்டீல் ரிங்குகள் பொருத்தபட்டுள்ளது.

ஒரு வேளை, டயர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளபட்டாலும், அது சாலையில் இருந்து சருக்காமலும், பாதிப்புகள் அடையாமலும், சென்று கொண்டிருக்க இந்த

ஸ்பெஷலான மிஷ்லின் டயர்கள் உதவுகிறது.

மேலும், இந்த வாகனம், டயர்களில் 0 பிஎஸ்ஐ என்ற அளாவிலான ஏர் பிரஷர் (காற்று அழுத்தம்) இருக்கும் போதிலும் சுமார் 29 கிலோமீட்டர் தூரம் செல்லும் திறன்

கொண்டுள்ளது.

மேலும், இதன் ஸ்டியரிங் மற்றும் ஆக்ஸில்கள் கூடுதல் வலுப்படுத்தபட்டுள்ளது.

காரின் அடிபாகம்;

காரின் அடிபாகம்;

மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 கார்ட் சொகுசு காரின் அடிபாகத்திற்கும் (அண்டர் பாடி), கவசம் போல் செயல்படும் வகையிலான முலாம் வழங்கபட்டுள்ளது.

இதன் ஃப்யூவல் டாங்கிற்கு, எந்த விதமான கவசம் போன்ற ஏற்பாடு செய்யபடவில்லை. ஆனால், ஒரு வேளை ஃப்யூவல் டேங்க் மீது குண்டு வெடிப்பு தாக்குதல் அல்லது துப்பாக்கி குண்டுகளால் தாக்குதல்கள் ஏற்பட்டால், தானாகவே இந்த பாதிப்புகளை சரி செய்து கொள்ளும் வகையிலான பொருட்கள் கொண்டு பூச்சு வழங்கபட்டுள்ளது.

விஷ வாயு தாக்குதல்;

விஷ வாயு தாக்குதல்;

மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 கார்ட் சொகுசு கார், விஷவாயு தாக்குதலுக்கு உட்படுத்தபட்டால், இதில் உள்ள தேர்வு முறையிலான ஃப்ரஷ் ஏர் சிஸ்டம் (சுத்தமான காற்று வழங்கும் சிஸ்டம்) சுத்தமான காற்றை வழங்கி, நச்சு காற்றை வெளியே அனுப்பிவிடுகிறது.

கன் ரேக்;

கன் ரேக்;

சிறப்பம்சமாக, இதில் கன் ரேக் (துப்பாக்கி ரேக்) வசதியும் வழங்கபடுகிறது. பூட்டில் உள்ள இந்த கன் ரேக், உங்களை தாக்க நினைக்கும் தீய மக்களிடம் இருந்து உங்களை தற்காத்து கொள்ள உதவுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 கார்ட் சொகுசு கார், 6.0 லிட்டர், ட்வின் டர்போ, வி12 இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 523 பிஹெச்பியையும், 830 என்எம் டார்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

எடை;

எடை;

மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 கார்ட் சொகுசு கார், 4.7 டன்கள் எடை கொண்டுள்ளது.

திறன்;

திறன்;

மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 கார்ட் சொகுசு கார், 4.7 டன்கள் எடை கொண்டுள்ள போதும், இந்த வி12 இஞ்ஜின் நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 7.9 நொடிகளில் எட்டிவிடுகிறது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 கார்ட் சொகுசு கார், உச்சபட்சமாக மணிக்கு 190 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

போட்டி;

போட்டி;

மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 கார்ட் சொகுசு கார், பனக்காரர்களயும், பெரும் புள்ளிகளை பாதுகாக்க உதவும் ஆடி ஏ8எல் செக்யுரிட்டி மாடலுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 கார்ட் சொகுசு கார், 10.5 கோடி ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் அறிமுகம் செய்யபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

செப்.25ல் விற்பனைக்கு வருகிறது மெர்சிடிஸ் மேபக் எஸ்600 ஆடம்பர கார்!

மீண்டும் மேபக் பிராண்டில் புதிய காரை அறிமுகப்படுத்தும் மெர்சிடிஸ் பென்ஸ்!

மெர்சிடிஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Mercedes has launched the Armoured Mercedes Maybach S600 Guard in India. Mercedes Maybach S600 Guard is world's first car to obtain VR10 protection level rating for passenger cars. It is also ERV 2010 (Explosions Resistant Vehicle) certified, which has blast protection. It has many advanced safety features. This armoured Maybach S600 Guard is priced at Rs. 10.5 crores ex-showroom (Delhi).
Story first published: Tuesday, March 8, 2016, 18:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X