மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கேப்ரியோலே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

உலகின் சிறந்த சொகுசு கார் மாடல்களில் ஒன்றாக மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் வர்ணிக்கப்படுகிறது. அந்த காரின் திறந்து மூடும் அமைப்பு கொண்ட கேப்ரியோலே ரக மாடல் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய காரில் இடம்பெற்றிருக்கும் வசதிகள், முக்கிய அம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கேப்ரியோலே கார் எஸ்500 என்ற மாடல் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 1971ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எஸ் க்ளாஸ் காரின் முதல் கேப்ரியோலே வகை மாடல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திறந்து மூடும் கூரை அமைப்பை தவிர்த்து, சாதாரண எஸ் க்ளாஸ் காருக்கும், இந்த கேப்ரியோலே மாடலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதன் ஃபேப்ரிக் கூரை கருப்பு, பழுப்பு, நீலம் மற்றும் சிவப்பு ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கும். இதன் கூரை வெறும் 17 வினாடிகளில் திறந்து மூடும் வசதி கொண்டது.

இந்த காரின் இன்டீரியர் மிகவும் விசேஷமாக இருக்கிறது. லெதர், அலுமினியம் மற்றும் மரப்பலகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் இன்டீரியர் 9 விதமான வண்ணங்களிலும், 6 விதமான அப்ஹோல்ஸ்ட்ரி ஆப்ஷன்களிலும் கிடைக்கும். இந்த காரில் 23 ஸ்பீக்கர்கள் கொண்ட 1,520வாட் பர்மிஸ்டர் சவுண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எஸ்500 கேப்ரியோலே காரில் 4.7 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 442 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

இந்த சொகுசு காரில் இருக்கும் சக்திவாய்ந்த எஞ்சின் மூலமாக, 0 - 100 கிமீ வேகத்தை 4.6 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும்.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கேப்ரியோலே காரில் ஏர்பேக்குகள், ஆட்டோமேட்டிக் பார்க்கிங் வசதி, 360 டிகிரி கேமரா, இரவு நேரங்களில் முன்னால் இருக்கும் தடைகளை கண்டறிந்து காட்டும், நைட் வியூ அசிஸ்ட் சிஸ்டம் போன்றவை உள்ளன.

கார் விபத்தில் சிக்கும் அபாயத்தை உணர்ந்து கொண்டு கண்ணாடிகள் தானாக மூடும் வசதி, சீட்பெல்ட்டுகளை இறுக செய்யும் வசதிகள் உள்ளன. இந்த சொகுசு காருக்கான பராமரிப்புக்காக சிறப்பு திட்டத்தையும் மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்துள்ளது. ரூ.73,000 செலுத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கான பராமரிப்பு பேக்கேஜை தேர்வு செய்து கொள்ளலாம்.

ரூ.2.25 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கேப்ரியோலே காருடன் இந்தியாவில் போட்டி போடும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Thursday, November 10, 2016, 10:36 [IST]
English summary
Mercedes has launched its flagship convertible in the form of the S500 Cabriolet in India.
Please Wait while comments are loading...

Latest Photos