வால்வோவுக்கு அடுத்த நெருக்கடி... இந்தியாவில் அறிமுகமாகும் 'மேன்' சொகுசு பஸ்கள்!

Written By:

இந்திய சொகுசு பஸ் மார்க்கெட்டில் வால்வோ நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. அடுத்ததாக ஸ்கானியா, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்களும் சொகுசு பஸ் மார்க்கெட்டில் போட்டி போட்டு வருகின்றன.

இந்த நிலையில், பஸ் கட்டுமானத்தில் புகழ்பெற்ற எம்ஜி குழுமம் ஜெர்மனியை சேர்ந்த மேன் நிறுவனத்தின் மேமோத் ஆம்னி பஸ் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக இரு நிறுவனங்களிடையே ஒப்பந்தம் ஆகியிருக்கிறது.

நகரங்களுக்கு இடையில் இயக்குவதற்கான அம்சங்களுடன் மேன் மேமோத் ஆம்னி பஸ் மாடல் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த பஸ் 12 மீட்டர் நீளமுடையதாக இருக்கும்.

இந்த பஸ்சில் 44 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதி இருக்கும். இந்த பஸ்சில் 220 பிஎச்பி பவரை அளிக்க வல்ல டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இது முன்புற எஞ்சின் கொண்ட ஆம்னி பஸ் மாடலாக இருக்கும்.

பீதம்பூரில் உள்ள மேன் நிறுவனத்தின் டிரக் ஆலையில் சேஸீ உற்பத்தி செய்யப்படும். பெலகாவியில் உள்ள எம்ஜி குழுமத்தின் ஆலையில் பஸ் கட்டமைக்கப்படும். எனவே, இது முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் ஆம்னி பஸ் மாடலாக இருக்கும்.

மேமோத் பஸ் மாடலை தொடர்ந்து பின்புற எஞ்சின் பொருத்தப்பட்ட சொகுசு பஸ் மாடலையும், மல்டி ஆக்சில் பஸ் மாடல்களையும் அறிமுகம் செய்ய இருப்பதாக எம்ஜி குழுமம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் மேமோத் பஸ்சை ஏற்றுமதி செய்ய எம்ஜி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாட்டில் இருந்துதான் முதல் ஆர்டர் கிடைத்திருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் பெங்களூரில் நடைபெற இருக்கும் பஸ் கண்காட்சியில் இந்த புதிய மேன் மேமோத் பஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, அசோக் லேலண்ட், வால்வோ ஐஷர், ஏஎல் நிசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பஸ் பாடி கட்டித் தரும் பணிகளை எம்ஜி குழுமம் செய்து வருகிறது. இந்தியாவிலேயே மிகப் பெரிய பஸ் பாடி கட்டும் நிறுவனங்களில் ஒன்றாக எம்ஜி குழுமம் விளங்குகிறது.

ஸகீராபாத் மற்றும் பெல்காவியில் இந்த நிறுவனத்தின் பஸ் பாடி கட்டும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் ஆண்டுக்கு 8,500 பஸ்கள் வரை பாடி கட்டுமானம் செய்து தரும் கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கின்றன.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Thursday, November 3, 2016, 12:15 [IST]
English summary
India's largest private bus manufacturer, MG Group is set to celebrate 20 years of bus building and by launching its flagship luxury Mammoth coach in India.
Please Wait while comments are loading...

Latest Photos