மிச்செலின் டயர்களை சுலபமான இஎம்ஐ முறையிலும் வாங்கலாம்

By Ravichandran

மிச்செலின் இந்தியா நிறுவனம், தங்களின் டயர்களை தற்போது இஎம்ஐ எனப்படும் மாதாந்திர தவணை முறையிலும் வழங்குகின்றனர்.

இதனால், மிச்செலின் இந்தியா நிறுவன டயர்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அதன் விலைகளை குறித்து அதிகமாக கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

தங்களின் கிரெடிட் கார்ட் மூலம் வாடிக்கையாளர்கள், 100% ஃபைனான்ஸ் வாய்ப்புகளையும் தேர்வு செய்து கொள்ளலாம். பயணியர் (பாசஞ்ஜர்) கார் டயர் மற்றும் இலகு ரக டிரக் டயர்கள் (லைட் டிரக் டயர்) மட்டுமே இஎம்ஐ தேர்வுகள் மூலம் பெற முடியும். இந்த இஎம்ஐ தேர்வுகள், இந்தியா முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கபட்ட மிச்செலின் பிரையாரிட்டி பார்ட்னர் மற்றும் டயர்பிளஸ் (TYREPLUS) ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கும்.

5,000 ரூபாய் அல்லது அதற்கு கூடுதலான மதிப்பு கொண்ட டயர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த இஎம்ஐ தேர்வுகள் வழங்கபடும். இஎம்ஐ தேர்வுகள் தேர்வு செய்வதற்காக டாகுமெண்டேஷன் எதுவுன் தேவையில்லை.

michelin-tyres-available-easy-emi-options-in-india

வாடிக்கையாளர்கள் தாங்கள் இஎம்ஐ தேர்வுகளின் கடன் தொகையை, 3 மாதங்கள் அல்லது 6 மாதஙகளின் தவணைகளில் திரும்ப செலுத்தலாம். இத்தகைய முறையில் டயர் வாங்குவதற்காக, கிரெடிட் கார்ட் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு, கூடுதலான செலவுகளை செய்யவேண்டிய அவசியங்களோ அல்லது வட்டி செலுத்த வேண்டிய அவசியங்களோ இல்லை.

மிச்செலின் அங்கிகரிக்கபட்ட டீலர்ஷிப்களில், வாடிக்கையாளர்கள் வாங்கும் டயர்களுக்கு, டிஜிட்டர் வாரண்டி ரெஜிஸ்ட்ரேஷன் வழங்குகின்றது. உடனடி செலவுகள் குறித்து கவலைப்படாமல் வாடிக்கையாளர்கள் தரமான டயர்களை வாங்குவதை ஊக்குவிப்பதற்காக தான், இத்தகைய ஏற்பாடுகள் வழங்கபட்டுள்ளதாக மிச்செலின் நிறுவனம் தெரிவிக்கிறது.

Most Read Articles
English summary
Michelin India announced that, it will be offering its Michelin tyres to customers, through easy EMI (Equated Monthly Instalment) options. Through their credit cards, Customers can avail 100 percent finance, on Tyre Purchase. EMI options are offered to those customers, who purchase tyres worth above Rs. 5,000. To know more about new Schemes from Michelin, check here...
Story first published: Wednesday, May 11, 2016, 11:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X