ரொம்ப ஸ்பெஷலான மினி கூப்பர் கார் இந்தியாவில் அறிமுகம்: அமேஸானில் மட்டும் கிடைக்கும்!

Written By:

மிக விசேஷ அம்சங்கள் கொண்ட புதிய மினி கூப்பர் எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய கார் மாடல் அமேஸான் தளத்தின் வழியாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

மிகவும் பிரிமியமான இந்த சொகுசு ஹேட்ச்பேக் கார் பற்றிய கூடுதல் தகவல்கள், விலை உள்ளிட்ட விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் படிக்கலாம்.

மினி கூப்பர் எஸ் கார்பன் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. சாதாரண கூப்பர் எஸ் மாடலை விட சற்று கூடுதல் சக்தி கொண்ட எஞ்சின் மற்றும் ஜான் கூப்பர் ஒர்க்ஸ் பாடி கிட்டும் பொருத்தப்பட்டுள்ளது.

கார் முழுவதும் கருப்பு நிறத்தில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு பளபளக்கிறது. மேலும், காரின் மையத்தில் சிவப்பு மற்றும் அடர் கருப்பு வண்ணக் கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜான் கூப்பர் ஒர்க்ஸ் விசேஷ பாடி கிட் மூலமாக தனித்துவமும், மிரட்டலான தோற்ற வசீகரத்தையும் பெற்றிருக்கிறது.

ஹெட்லைட் டிசைன் வடிவமைப்பில் சிறிய மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது. 17 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் புகைப்போக்கி குழாய்கள் போன்றவையும் கருப்பு நிறத்தில் கவர்ச்சியாக தெரிகிறது.

இந்த காரில் இரண்டு டர்போசார்ஜர்கள் துணையுடன் இயங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 210 பிஎச்பி பவரையும், 300என்எம் டார்க்கையும் இந்த எஞ்சின் அளிக்க வல்லது.

இந்த காரில் 6 ஸ்பீடு ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. மேலும், ஸ்டீயரிங் வீல் மூலமாக கியரை மாற்றுவதற்கான பேடில் ஷிஃப்டர்களும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இன்டீரியரும் மிகவும் தனித்துவம் கொண்டதாக இருக்கிறது. கார்பன் எடிசன் என்பதற்கு ஏற்றாற்போல் கருப்பு நிறம் ஆக்கிரமித்துள்ளது. சென்டர் கன்சோலின் இருபுறம் சிவப்பு வண்ண பேனல்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

ஜான்கூப்பர் ஒர்க்ஸ் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் உள்ளன. கம்போர்ட், ஸ்போர்ட் மற்றும் எஃபிசியன்ஸி ஆகிய மூன்றுவிதமான டிரைவிங் மோடுகளில் காரை இயக்கும் வசதி உள்ளது.

முன்புறத்தில் டியூவல் ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கிராஷ் சென்சார், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல் மற்றும் ரன் ஃபிளாட் இன்டிகேட்டர் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது.

ஹெட் அப் டிஸ்ப்ளே, 8.8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் சிஸ்டம் போன்ற பல வசதிகளை ஆப்ஷனலாக பெற்றுக் கொள்ளலாம்.

இந்த கார் ரூ.39.90 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அமேஸான் தளத்தில் முன்பதிவு செய்து வாங்கலாம்.

English summary
The Mini Cooper S Carbon Edition is launched in India and is available for booking exclusively on Amazon.
Please Wait while comments are loading...

Latest Photos