மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய மிட்சுபிஷி மான்டேரோ எஸ்யூவி!

Written By:

விற்பனை இல்லாததால் கடந்த 2014ம் ஆண்டு மிட்சுபிஷி மான்டேரோ எஸ்யூவியின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது. ஆஃப்ரோடு செய்வதற்கு ஏற்ற சொகுசு எஸ்யூவி மாடல்களில் ஒன்றான மிட்சுபிஷி மான்டேரோ தற்போது மேம்படுத்தப்பட்டு மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இது ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த எஸ்யூவியின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள், எஞ்சின் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

மிட்சுபிஷி மான்டேரோ எஸ்யூவி டெல்லியில் ரூ.67.88 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், மும்பையில் ரூ.71.06 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மிட்சுபிஷி மான்டேரோ எஸ்யூவியில் 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 189 பிஎச்பி பவரையும், 441 என்எம் டார்க்கையும் வழங்கம். 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த எஸ்யூவியில் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு உகந்த  4 விதமான டிரைவிங் மோடுகள் உள்ளன. இந்த டிரைவிங் மோடுகளை வாகனம் இயங்கிக் கொண்டிருக்கும்போதே மாற்ற முடியும்.

புதிய மிட்சுபிஷி மான்டேரோ எஸ்யூவியில் ஹெட்லைட்டுகள் மறுவடிவமைப்பு பெற்றிருக்கின்றன. மேலும், எதிரில் வரும் வாகனங்களை கேமரா மூலமாக கண்டறிந்து தானியங்கி முறையில் செயல்படும் ஹை பீம் வசதி, எல்இடி பகல்நேர விளக்குகள் போன்றவை முக்கிய அம்சங்கள். பம்பர் டிசைனும் மாறியிருக்கிறது.

பக்கவாட்டில் மிக வலிமையான வீல் ஆர்ச்சுகள், கட்டுமஸ்தான பாடி லைன்கள், ரூஃப் ரயில்கள், 18 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை வலுவான தோற்றத்தை தருகின்றன.

 

பின்புறத்தில் சில்வர் வண்ண ஸ்கிட் பிளேட், பின்புற பனி விளக்குகள் சிறப்பு சேர்க்கின்றன. மொத்தத்தில் கட்டுமஸ்தான எஸ்யூவி மாடலாக தோற்றமளிக்கிறது.

இன்டீரியரில் இரட்டை வண்ணக் கலவை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 12 ஸ்பீக்கர்களுடன் 860 வாட் திறன் கொண்ட ராக்ஃபோர்டு மியூசிக் சிஸ்டம், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன் ரூஃப் ஆகியவை முக்கிய அம்சங்கள்.

இரண்டு ஏர்பேக்குகள், கர்ட்டெயின் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் பிரேக் அசிஸ்ட் உள்பட பல நவீன பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

 

இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். ஆடி க்யூ7 மற்றும் வால்வோ எக்ஸ்சி90 உள்ளிட்ட சொகுசு எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும். முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் டெலிவிரி துவங்கப்படும்.

English summary
Mistubishi Motors has relaunched the Montero SUV in India with deliveries set to start next month.
Please Wait while comments are loading...

Latest Photos