சென்னையில் நடைபெறுகிறது போக்ஸ்வேகன் வென்டோ கோப்பை மோட்டார் ரேஸ்...!!

By Meena

எம்எம்எஸ்சி ஃபோக்ஸ்வேகன் வென்டோ கோப்பை கார் பந்தயம் இந்த ஆண்டு சென்னையில் நடைபெற இருக்கிறது. ஆண்டுதோறும் ஃபோக்ஸ்வேகன் வென்டோ கோப்பை மோட்டார் ரேஸ் போட்டிகள் பெரும்பாலும் நொய்டா பந்தய டிராக்குகளில்தான் நடத்தப்படுகின்றன.

எம்எம்ஆர்டி எனப்படும் மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கோப்பை போட்டிகள் நடைபெறாமல் இருந்தன. இந்த முறை, அந்தக் குறையைப் போகும் வகையில் சென்னையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்று பந்தயங்கள் நடைபெற உள்ளன. இது தமிழகம் உள்ளிட்ட தென்மாநில மோட்டார் பந்தய வீரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கோப்பை

சர்வதேச ஜாம்பவான் ரேஸ் வீரர்கள் போட்டியிட்ட டிராக்காக விளங்கும் எம்எம்ஆர்டி, பல வீரர்களை உருவாக்கி விட்ட பெருமையையும் கொண்டது. மற்ற டிராக்குகளைப் போல அல்லாமல் எம்எம்ஆர்டி சற்று சிக்கலான அமைப்புடைய பாதையாக உள்ளது.

மொத்தம் 3.71 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த டிராக், 11 மீட்டர் அகலமும், 12 வளைவுகளையும் கொண்டது. இந்த டிராக்கில் மொத்தமாக மூன்று நேர் பாதைகள் உள்ளன. அதில் அதிகபட்சமான நேர் பாதை 250 மீட்டர் தொலைவு கொண்டதாகும். இதைத்தவிர, 2.1 கிலோ மீட்டர் தொலைவுடைய சிறிய டிராக்கும் எம்எம்ஆர்டியில் உள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் முதல் சுற்றில் பங்கேற்ற எந்த வீரர்களும், இதற்கு முன்னால் எம்எம்ஆர்டி டிராக்கில் வாகனத்தை ஓட்டியதில்லை. எனவே, அவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்கப் போகிறது.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டா கோப்பையின் இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்று இங்கு நடைபெறும்.

இறுதிச் சுற்று நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேசனல் சர்க்கியூட் எனப்படும் ஃபார்முலா-1 பந்தய டிராக்கில் நடைபெற உள்ளது. எது எப்படியோ மோட்டார் பைக் ரேஸ் பிரியர்களுக்கு சென்னையில் இந்த முறை ஃபோக்ஸ் வேகன் வென்ட்டோ கோப்பை நடைபெறுவது புதிய உற்சாகத்தைத் தரும் என்பதில் மாற்றமில்லை...

முதல் சுற்றின் முடிவுகளை கீழே தெரிந்து கொள்ளலாம்...

1. இஷான் தோதிவாலா - 108 புள்ளிகள்

2. கர்மேந்தர் பால் சிங் - 108 புள்ளிகள்

3. கெய்த் டிசோஸா - 74 புள்ளிகள்

4. ஆதித்யா பவார் - 74 புள்ளிகள்

5. ஜீத் ஜாபக் - 62 புள்ளிகள்

6. அமித் மேதே - 62 புள்ளிகள்

7. நிரஞ்சன் தோட்கரி - 54 புள்ளிகள்

8. பிரதீப் ராவ் - 52 புள்ளிகள்

9. ஸ்ரீவெங்கட தேஜா- 50 புள்ளிகள்

10. கௌதம் ராஜ் - 42 புள்ளிகள்

11. அர்ஃபத் முகமது - 36 புள்ளிகள்

12. ஹாதிம் சபீர் - 34 புள்ளிகள்

13. ரஷத் கான் - 28

14. அருண்சோரி வல்லபனேனி - 28 புள்ளிகள்

15. ஈஸ்வர் பொலிசெட்டி - 26 புள்ளிகள்

16. ராஜீவ் ஸ்ரீவத்ஸா - 20 புள்ளிகள்

17. அபிஷேக் வகில் - 18 புள்ளிகள்

Most Read Articles
English summary
Volkswagen Vento Cup returns to Madras Motor Race Track.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X