புதிய தலைமுறை ஸ்கார்ப்பியோ பிக்கப் டிரக்: ஸ்பை படங்கள்!

Written By:

மஹிந்திரா ஸ்காரப்பியோ அடிப்படையிலான பிக்கப் டிரக் மாடல் கேட்வே என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை ஸ்கார்ப்பியோ எஸ்யூவியின் அடிப்படையிலான புதிய தலைமுறை கேட்வே பிக்கப் டிரக் மாடலை மஹிந்திரா அறிமுகம் செய்ய இருக்கிறது.

அடையாளங்கள் மறைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட இந்த புதிய பிக்கப் டிரக் மாடலின் ஸ்பை படங்களை ஆட்டோமொபைல் இணையதளம் ஒன்று வெளியிட்டு இருக்கிறது. அதுகுறித்த படங்கள், கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

மும்பை- புனே எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த புதிய மஹிந்திரா கேட்வே பிக்கப் டிரக் மாடல் சோதனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் உற்பத்திக்கு செல்வதற்கு ஏற்ற டிசைன் அம்சங்களை இந்த பிக்கப் டிரக் மாடல் பெற்றிருக்கிறது.

புதிய தலைமுறை ஸ்கார்ப்பியோவின் முகப்பு அப்படியே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, புரொஜெக்டர் ஹெட்லைட், தேன்கூடு வடிவ க்ரில் அமைப்பு, பல் வரிசை போன்ற க்ரோம் பட்டைகள் போன்றவற்றை கொண்டுள்ளது.

ஆனால், தற்போதுள்ள கேட்வே மாடலில் இருந்த அதே அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பக்கவாட்டில் புதிய சைடு ஸ்டெப் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பின்புறத்தில் பழைய கேட்வே மாடலின் பக்கெட் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது சற்று ஏமாற்றமான விஷயமாக இருக்கிறது. ஆனால், விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன்னர் பின்புறத்தில் பொருட்கள் வைப்பதற்கான பக்கெட் மற்றும் டெயில் லைட்டுகளில் மாற்றங்களை செய்யும் என எதிர்பார்க்கலாம்.

இன்டீரியர் படங்கள் இல்லை. ஆனால், புதிய ஸ்கார்ப்பியோவில் உள்ளது போன்றே புதிய டேஷ்போர்டு, இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் தரமான அப்ஹோல்ஸ்டரி பயன்படுத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு இருக்கை வசதிகளை கொண்டிருப்பதால், 5 பேர் தாராளமாக பயணிக்கலாம். மேலும், தனிநபர் பயன்பாட்டையும் கருதி, சற்று பிரிமியம் பிக்கப் டிரக் மாடலாக இருக்கும்.

புதிய மஹிந்திரா கேட்வே பிக்கப் டிரக் மாடலில் 2.2 லிட்டர் எம்-ஹாக் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாக இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

Spy Images Source: Motor World India

English summary
ew-Gen Mahindra Scorpio Getaway Pick-Up Spied in Maharashtra. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos