புதிய லேண்ட்ரோவர் எவோக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய லேண்ட்ரோவர் எவோக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Written By:

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய மாடலுடன் சேர்த்து, ஸ்பெஷல் எடிசன் மாடல் ஒன்றையும் லேண்ட்ரோவர் நிறுவனம் விற்பனைக்கு விட்டுள்ளது. இந்த புதிய மாடல்கள் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய லேண்ட்ரோவர் எவோக் எஸ்யூவியில் எல்இடி அடாப்டிவ் ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்டீயரிங் வீல் திரும்புவதை தவிர்த்து, வளைவுகளில் ஹெட்லைட் ஒளி சரியான திசையில் பாய்ச்சப்படும் தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது. பின்புற கதவை கை சைகை மூலமாக திறக்கும் கெஸ்ச்சர் கன்ட்ரோல் திறக்கும் வசதியும் உள்ளது.

 

 

உட்புறத்தில் 10 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்று இருக்கிறது.விண்ட் ஷீல்டில் விபரங்களை காட்டும் ஹெட் அப் டிஸ்ப்ளே வசதியும் உள்ளது. உயர் தர லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய எவோக் எஸ்யூவியில் 2.0 லிட்டர் இன்ஜெனியம் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 177 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடலைவிட 20 கிலோ எடை குறைவாக உள்ளது.

ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்றதொரு தொழில்நுட்பமாக டார்க் வெக்டரிங் சிஸ்டம் உள்ளது. அனைத்து சக்கரங்களுக்கும் தேவையான அளவு டார்க் திறனை வழங்கும் இந்த தொழில்நுட்பமானது ஓட்டுனருக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

ஸ்பெஷல் எடிசன் மாடல்

2017 மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவியுடன் எம்பெர் என்ற பெயரில் ஸ்பெஷல் எடிசன் மாடலும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. கருப்பு மற்றும் சிவப்பு என இரட்டை வண்ணத்தில் கலக்கலாக வந்துள்ளது இந்த ஸ்பெஷல் எடிசன்.

எவோக் எஸ்யூவியின் HSE வேரியண்ட்டில் மட்டுமே இந்த எம்பர் எடிசன் கிடைக்கும். உட்புறத்தில் சிவப்பு வண்ண நூல் தையல் போடப்பட்ட கருப்பு வண்ண இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. இவை மிகவும் கவர்ச்சியை தருவதாக அமைந்துள்ளன.

எக்ஸ்ஷோரூம் விலை விபரம்

  • எவோக் ப்யூர்: ரூ.49.10 லட்சம்
  • எவோக் எஸ்இ: ரூ.54.20 லட்சம்
  • எவோக் எஸ்இ டைனமிக்: ரூ.56.30 லட்சம்
  • எவோக் எச்எஸ்இ: ரூ.59.25 லட்சம்
  • எவோக் எச்எஸ்இ டைனமிக்: ரூ.64.65 லட்சம்
  • எவோக் எச்எஸ்இ டைனமிக் எம்பர் எடிசன்: ரூ.67.90 லட்சம்

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Land Rover has launched the new 2017 Evoque in India, priced at Rs 49.10 lakh onward, along with a special ‘Ember’ edition.
Please Wait while comments are loading...

Latest Photos