அடுத்த தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார் அறிமுகம் எப்போது?

Written By:

இந்தியாவின் பட்ஜெட் வாடிக்கையாளர்களின் கனவு மாடல் மாருதி ஸ்விஃப்ட். சந்தைப் போட்டி கடுமையாக இருந்தாலும், தொடர்ந்து விற்பனையிலும் முக்கிய இடத்தை தக்க வைத்து வருகிறது.

இந்த நிலையில், போட்டியாளர்களைவிட கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட புதிய ஸ்விஃப்ட் காரை மாருதி நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது இந்த கார் தீவிர சாலை சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த புதிய கார் எப்போது அறிமுகமாகும் என்ற ஆவல் வாடிக்கையாளர் மத்தியில் எழுந்துள்ளது.

வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற இருக்கும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் புதிய ஸ்விஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. வடிவமைப்பிலும், வசதிகளிலும் பலபடிகள் முன்னேறியிருக்கும் புதிய ஸ்விஃப்ட் கார் குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ஸ்விஃப்ட் காரின் டிசைன் துறுதுறுப்பான தோற்றத்தை வழங்குகிறது. சில மாற்றங்களுடன் அந்த துறுதுறுப்பான தோற்றத்தை அதிகரித்துள்ளனர் சுஸுகி எஞ்சினியர்கள். ஆம், புதிய க்ரில் வடிவமமைப்பு, கருப்பு வண்ண பின்னணி கொண்ட ஹெட்லைட் அமைப்பு, புதிய அலாய் வீல்கள், பின்புறத்தில் புதிய டெயில் லைட் அமைப்பு மற்றும் மறுவடிவமைப்பு பெற்ற பம்பர்களுடன் கவர்ச்சி கூட்டப்பட்டிருக்கும்.

 

 

முகப்பில் பெரிய அறுகோண வடிவ க்ரில் அமைப்பு மிரட்டல் தோற்றத்தை தரும். புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவையும் இடம்பெறும். கூரை அமைப்பிலும் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கும்.

அதேபோன்று, புதிய ஸ்விஃப்ட் காரின் உள்பக்கத்தின் வடிவமைப்பிலும் மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கும். தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல்,  இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை முக்கியமானதாக இருக்கும்.

புதிய சுஸுகி ஸ்விஃப்ட் காரில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சினும், 1.2 லிட்டர் டியூவல்ஜெட் டீசல் எஞ்சினும் பயன்படுத்தப்படும். இதன் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வரும்.

டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும். அதேபோன்று, எஸ்விஎச்எஸ் ஹைபிரிட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கும். ஆனால், இந்தியாவில் இதே எஞ்சின் ஆப்ஷன்களில் வருமா என்பது குறித்து இப்போது தகவல் இல்லை.

டாப் வேரியண்ட் பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், கர்டெயின் ஏர்பேக்குகள், ரேடார் பிரேக் சப்போர்ட் ஆகிய தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்று இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் சுஸுகி நிறுவனத்தின் புதிய கார் ஆலையில் புதிய ஸ்விஃப்ட் கார் உற்பத்தி செய்யப்படும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The next generation Maruti Suzuki Swift is expected to make its official debut at the 2017 Geneva Motor Show.
Please Wait while comments are loading...

Latest Photos